tamilnadu

img

சிபிஎம் வேலூர் - திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக எஸ்.டி.சங்கரி தேர்வு

வேலூர், நவ.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் - திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக எஸ்.டி.சங்கரி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட 24- வது மாநாடு நவம்பர் 16,17 தேதிகளில் திருப்பத்தூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கே.ஜெ.சீனிவாசன், எம்.இந்துமதி, பெ.திலீபன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஸ்தாபன வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, நிதிநிலை அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஆறுமுக நயினார் உரை யாற்றினார். புதிய மாவட்டக்குழு மாநாட்டில் 31 பேர் கொண்ட புதிய  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாளராக எஸ்.டி.சங்கரி தேர்வு செய்யப்பட்டார்.  எஸ்.தயாநிதி, ஏ.நாராயணன், எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன், செ.ஏகலைவன், எஸ்.பரசுராமன், சி.சரவணன், ஆர்.சுடரொளியன் ஆகியோர்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அனைத்து வசதிகள் கொண்டதாக மேம்படுத்த வேண்டும். திருப்பத்தூர் நகரத்தில் கூட்ட நெரிசலை தடுக்கின்ற வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாய கல்லூரி மற்றும் வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு பகுதி யில் அரசு கலைக் கல்லூரிகளை அமைக்க வேண்டும். குடியாத்தத்தை ஒட்டியுள்ள தமிழ்நாடு ஆந்திர எல்லை ஒட்டியுள்ள சைன குண்டா, தனகொண்டபல்லி கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறையில் பாதுகாத்திடும் வகையில் அதில் உள்ள காலி பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர் மூலம் இயக்குவதை கைவிடுத்து நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். கலை பண்பாட்டுத் துறை  அலுவலகம் தற்போது காஞ்சி புரத்தில் இயங்கி வருகிறது. அதை மாற்றி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை ஒன்றி ணைத்து வேலூரில் மண்டல அலு வலகம் இயங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் நாட்டுப்புற கலைஞர்கள், நாடக கலைஞர்கள் பயன்பெற நல வாரி யம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.