வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவ ரும், கேரள முன்னாள் அமைச்சருமான மறைந்த தோழர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு நாட்டின் இரண்டா வது மிக உயரிய குடிமை விருதான ‘பத்ம விபூஷன்’ வழங்கி கௌரவிக்கப்பட உள் ளது. கேரள அரசியலில் ஒரு மாபெரும் ஆளுமையாகவும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒரு வராகவும் திகழ்ந்த வி.எஸ்.அச்சுதா னந்தன், 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராகப் பணியாற்றினார். பல தசாப்தங்களாகப் பொதுவாழ்வில் ஒரு முக்கியக் குரலாக அவர் ஒலித்து வந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி வயது முதிர்வு கார ணமாக அச்சுதானந்தன் காலமானார் என் பது குறிப்பிடத்தக்கது.
