திரிபுரா மாவட்டக் கவுன்சில் தேர்தல் அனைத்து இடங்களிலும் இடதுமுன்னணி போட்டி
ஜிதேந்திர சவுத்ரி அறிவிப்பு
அகர்தலா திரிபுரா பழங்குடியின வட்டார தன்னாட்சி மாவட்டக் கவுன் சில் (டிடிஏஏடிசி) தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி, அனைத்து இடங்களிலும் (28) வேட்பாளர்களை நிறுத்தி, முழு வலிமையுடன் தனித்துப் போட்டி யிட முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் அர சியல் தலைமைக்குழு உறுப்பின ரும், திரிபுரா சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில்,”தேர்தல்கள் என்பது நாட்டில் நிலவும் சூழலை யும், மாநிலத்தின் நிலையையும் வாக்காளர்களிடம் கொண்டு செல் வதற்கான ஒரு வாய்ப்பு ஆகும். அதனால் ஒவ்வொரு தேர்தலையும் இடதுசாரிக் கட்சிகள் ஒரு முக்கிய மான அரசியல் போராட்டமாகவே கருதுகின்றன. வரவிருக்கும் டிடிஏ ஏடிசி தேர்தலில் நாங்கள் (இடது சாரிகள்) முழு பலத்துடன் போராடு வோம். ஆறாவது அட்டவணையின் கீழ் அரசியலமைப்பு விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டிடிஏ ஏடிசி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் உள் ளாட்சித் தேர்தல்களைப் போலவே டிடிஏஏடிசி தேர்தலும் தாமதப் படுத்தி, தள்ளிப் போடப்படுகின் றது. மாநில அரசு தனது விருப்பப் படி டிடிஏஏடிசி தேர்தல்களை கால வரையின்றி தள்ளிப்போட முடி யாது. பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ், திரிபுராவில் எந்தத் தேர்தலும் சுதந்திரமாகவும், நேர் மையாகவும் அல்லது அமைதியாக வும் நடந்ததில்லை. வரவிருக்கும் டிடிஏஏடிசி தேர்தல்கள் எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும். பாஜக - திப்ரா மோதா கூட்டணி ஆளும் பாஜக - திப்ரா மோதா கூட்டணி, திரைக்குப் பின்னால் ஒன்றாக இருந்து கொண்டு, வெளி யில் மட்டும் எதிர்ப்பது போல் நாட கம் ஆடுகின்றன. மக்கள் முன்னால் எதிர்ப்பு, பின்னால் ஒற்றுமை என இரட்டை நாடகம் ஆகும். இரு கட்சி கள் (பாஜக - திப்ரா மோதா) மாநில அரசிலும், மோதா தலைமையி லான டிடிஏஏடிசி-யிலும் அதிகா ரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறிய திலிருந்தும், தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாததிலிருந்தும் மக்களைத் திசைதிருப்பவே பாஜக - திப்ரா மோதா கூட்டணியில் மோதல் போக்கு காட்டப்படுகிறது. அதிகாரம், ஊழல் டிடிஏஏடிசி பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள் ளது. அதிகாரத்தில் இருந்தபோதி லும், பாஜக-திப்ரா மோதா அரசோ அல்லது மோதா தலைமையிலான டிடிஏஏடிசி நிர்வாகமோ நிலைமை யை மேம்படுத்த எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அவர்கள் அதி காரத்தைத் தக்கவைப்பதிலும், எல்லையற்ற ஊழலிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அதே சமயம் கீழ்மட்டத் தொண்டர்கள் மோதல்களிலும் வன்முறைகளி லும் தள்ளப்படுகிறார்கள். பாஜக வெறுப்பை வளர்க்கிறது பாஜக - திப்ரா மோதா இடை யிலான மோதலின் உண்மைத் தன்மை மோசமானது. இரு கட்சி களும் போராட்டத்துடன் மோதல் நாடகத்தை அடிக்கடி அரங்கேற்றி வருகின்றனர். இந்தப் போராட்டம் உண்மையானது என்றால், அது ஏன் தலைமைச் செயலகத்திலோ, அமைச்சரவையிலோ அல்லது சட்டமன்றத்திலோ நடப்பதில்லை? வீதிகளிலும் வயல்களிலும் மட்டும் நடக்கிறது? அவர்கள் ஏன் அமைச்ச ரவையில் ஒன்றாக இருக்கிறார் கள்? ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. பாஜக - திப்ரா மோதா கூட்டணி பட்டப்பகலில் மக்களை ஏமாற்றுகிறது. மாநில பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சார்யா கோவாய் தொகுதி சிபிஎம் எம்எல்ஏ நிர்மல் பிஸ்வாஸ், அபபகுதியில் வாழும் ஒரு நபரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுப்பதாகவும் மிரட்டியதாகவும் வன்முறைமிக்க வகையில் பேசி வருகிறார். இது கண்டித்தக்கது ஆகும். மேலும் பாஜக தொண்டர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் தோலை உரிப்போம் என்று மிரட்டு கிறார்கள். இது என்ன மாதிரியான மொழி? பாஜக எவ்வாறு வெறு ப்பை வளர்க்கிறது என்பதைக் காட்டுகிறது” என அவர் கூறினார். டிடிஏஏடிசி தேர்தலுக்கு முன்ன தாக திரிபுராவில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இடது சாரிகள் தங்களை ஒரு முதன்மை யான எதிர்க்கட்சியாக முன்னி றுத்தி, முழுமையாகத் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருகின் றன என்பது குறிப்பிடத்தக்கது.
