முத்திரை தங்கள் கட்சி மீது முஸ்லீம்-யாதவ் முத்திரை குத்தப் பட்டுள்ளதைக் களையும் முயற்சியில் சமாஜ்வாதிக் கட்சி இறங்கியிருக்கிறது. வெறும் உத்தரப்பிரதேசத் திற்குள் அரசியலை நடத்திக் கொண்டிருந்தால், மீண்டும், மீண்டும் முத்திரை குத்துவதுதான் நடக்கும் என்று அகி லேஷ் தலைமை கருதியிருக்கிறது. பெங்களூருவில் நவம்பரிலும், ஹைதராபாத்தில் டிசம்பரிலும் கூட்டம் நடத்தினார்கள். ஸ்டார்ட் அப் மற்றும் செயற்கை நுண்ண றிவு பற்றிய கூட்டங்களாக இவை, தற்போது ஒடிசா மாநி லம் புவனேஸ்வரில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். அடுத்து, லடாக், ஜெய்ப்பூர், மும்பை என்று நகரப் போகி றார்கள். மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றியை, சட்டமன்றத் தேர்தலில் பெற வேண் டும் என்பதற்காக மாநில முக்கிய நகரங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தவுள்ளனர். ஆமை வேகம் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது நடந்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் பெரும் முறைகேடுகள் நடந்தன. ஆட்சி மாறிய நிலை யில் இது குறித்த விசாரணை படுவேகம் எடுக்கும் என்று மக்கள் நம்பினர். அதோடு, 545 பேரை நியமனம் செய்வதற் காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் நடைபெற்ற முறை கேடுகளின் அளவைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் கூறுகிறார்கள். பாஜகவுக்கு எதிராக இந்த ஊழல் விவ காரத்தைக் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும் என்ப தால் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஆமை வேகத்தில் இந்த வழக்கு நகர்கிறது. பெரும் தலைகள் சிக்கும் என்று சொன்னார்கள். ஆனால் அப்போது பதவி யில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி அம்ரித் பால் மற்றும் ஒரு ஏட்டு ஆகிய இருவர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக் கல் செய்திருக்கிறார்கள். சட்ட ஒழுங்கா..? குழந்தைத் திருமணம் நடத்தி வைக்க முயன்ற தற்காக ஐந்து பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 வயது சிறுமிக்குத் திரு மணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர். மணமக னுக்கு 27 வயதாகிறது. மகாராஷ்டிராவில் குழந்தைத் திரு மணம் பெரிய அளவில் நடை பெறுகிறது. சராசரியாக நான்கில் ஒரு பெண், 18 வயதை எட்டும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். கடந்த ஆண்டில் மட்டும் 1,200 திருமணங்கள் தடுக் கப்பட்டதாக அரசு கூறுகிறது. இதை சட்ட ஒழுங்குப் பிரச்ச னையாக மட்டுமே ஆட்சி யாளர்கள் பார்க்கிறார்கள். தற்போதை பாஜக அரசும் சரி, முந்தைய அரசுகளும் கூட சமூகப் பிரச்சனையாக குழந்தைத் திருமணத்தை அணுக மறுத்துள்ளன. சட்டங்கள் இயற்றுவதோடு தங்கள் வேலை முடிந்து விட்டதாக நினைத்ததால்தான் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பனிப்போர் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் இடையிலான பனிப்போர் முற்றியிருக்கிறது. ஆதித்யநாத் மற்றும் கேசவ் மவுரி யாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கிறது. மோடி மற்றும் அமித் ஷா ஆதரவுடன் ஆதித்யநாத்துக்கு எதிராக மவுரியா அரசியல் நடத்தி வருகிறார். திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் விழாவில் அவிமுக்தேஷ்வ ரானந்த்தை அவமதித்த விவகாரத்தில் மவுரியா, சாமி யாருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். சாமி யார் அவிமுக்தேஷ்வரானந்தும் இந்த சண்டையைப் பயன்படுத்த முயல்கிறார். அவரை காங்கிரஸ்-சமாஜ்வாதி ஆதரவாளர் என்ற முத்திரையை ஆதித்ய நாத் ஆதரவாளர்கள் குத்த முயற்சிக்கிறார்கள். இத னால், ஆதித்யநாத்தைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, மவுரியாவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சாமி யார் கேட்கத் தொடங்கிவிட்டார்.
