ஆந்திராவில் பழங்குடி மக்கள் மீது அடக்குமுறை
புதுதில்லி ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் 1/70 சட் டத்தின் (Land Transfer Regulation Act 1/70) கீழ் பாது காக்கப்பட்ட பழங்குடியினர் பகுதி யான இனுமுரு கிராமத்தில், பழங் குடியினர் மீது அரசால் ஏவப்படும் அடக்குமுறைக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின் கூறுகையில்,”உள்ளூர் வரு வாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு, செல்வாக்கு மிக்க நபர்கள் (பழங்குடியினர் அல்லாதவர்கள்), பழங்குடியின மக்களால் பயிரி டப்பட்டிருந்த சோளப் பயிர்களை சட்டவிரோதமாக அழித்துள்ளனர். இது பழங்குடியினரின் உரிமை களை மீறும் செயலாகும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். மேலும், பெண்கள் உட்பட 20 பழங்குடியினர் மீது கொலை முயற்சி (பிரிவு 307) உள்ளிட்ட பொய் வழக்குகளைப் பதிவு செய் துள்ள ஆந்திர பாஜக கூட்டணி அர சின் நடவடிக்கை கண்டனத்துக்குரி யது. கடந்த 2026 டிசம்பர் 23 முதல் ஆந்திர அரசு ஏலூரு மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதச் சூழலை உரு வாக்கியுள்ளது. காவல்துறையின் கெடுபிடிகளால் தோழர்கள் ராம கிருஷ்ணா, நாகேஸ்வர ராவ் போன்ற பழங்குடியினத் தலைவர் கள் கடந்த 25 நாட்களாக தலை மறைவாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு ளது. கோரிக்கை பழங்குடி மக்கள் மீது சுமத்தப் பட்டுள்ள அனைத்துப் பொய் வழக்குகளும் உடனடியாகத் திரும் பப் பெறப்பட வேண்டும்; பயிர் களை அழித்த ஆக்கிரமிப்பாளர் கள் மற்றும் அதற்குத் துணை நின்ற அதிகாரிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; பழங்குடியின நிலங் களை ஆக்கிரமிப்பிலிருந்து பாது காக்க 1/70 சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்; பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு மாநில அரசு தகுந்த இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை ஆந்திர அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், பழங்குடியின மக்கள் மீதான இத்தகைய அடக்குமுறை கொள்கைகளை அரசு தொடர்ந் தால், நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப் படும் என அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் எச்ச ரிக்கை விடுக்கிறது” என அவர் கூறினார்.
