ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானாவில் பலத்த பாதுகாப்பு இந்தியாவிற்கு
1947இல் சுதந்திரம் கிடைத்தாலும், நமக்கென்று ஒரு சட்டம் தேவைப்பட்டது. அதனால் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையி லான குழு, சுமார் 2 ஆண்டுகள், 11 மாதங் கள், 18 நாட்கள் கடுமையாக உழைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உரு வாக்கியது. 1930, ஜனவரி 26 அன்று காங்கி ரஸ் மாநாட்டில் ‘முழு சுதந்திரமே நமது லட்சியம்’ என உறுதி ஏற்கப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவு கூரவே, 1950, ஜனவரி 26 அன்று அரசி யலமைப்புச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு, இந்தியா ‘குடியரசு நாடாக’ மலர்ந்தது. இந்நாளை இந்தியா குடி யரசு தின விழாவாக கொண்டாடி வரு கிறது. இந்நிலையில், நாட்டின் 77ஆவது குடி யரசு தினம் திங்களன்று நாடு முழு வதும் கொண்டாடப்படுகிறது. இந்த குடி யரசு தின விழாவையொட்டி பஞ்சாப், ஹரி யானா மற்றும் சண்டிகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தலைமையகத்தில் உள்ள முக்கிய அலு வகலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு கட்டி டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக ரிக்கப்பட்டுள்ளதாக 4 மாநிலங்களின் (யூனியன் பிரதேசம் சேர்த்து) அதிகாரி கள் தெரிவித்தனர்.
