லக்னோ இந்துத்துவா குண்டர்கள் மிரட்டல் காதல் இணையர் கவலைக்கிடம்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான் பூரில் உள்ள பீசா (pizza) கடையின் 2ஆவது மாடியில் சனியன்று இரவு, இளம் காதல் இணையர் பேசிக் கொண்டே உணவு அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள்,”இங்கு காதல் ஜோடிக்கு அனுமதி இல்லை” என்று கூறி, லவ் ஜிஹாத் போன்ற வார்த்தைகளு டன் மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்துத்துவா குண் டர்கள் தங்களைத் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், இரண்டாவது மாடி யில் இருந்து அந்த காதல் இணையர் ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தது. இந்த சம்பவத்தில் இளைஞ ரும், இளம்பெண்ணும் பலத்த காய மடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். ஞாயி றன்று காலை நிலவரப்படி காதல் இணை யரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டா ரங்கள் மூலம் செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆனால் இந்த அடாவடி சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலானதைத் தொட ர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு மட்டும் செய்துள்ளனர். இந்துத்துவா குண்டர் களை இதுவரை கைது செய்யவில்லை. பாட்னா ஆர்ஜேடியின் செயல் தலைவராக தேஜஸ்வி பிரசாத் பீகார் மாநிலத்தின் “இந்தியா” கூட் டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. லாலு பிரசாத், தேஜஸ்வி, மிசா பார்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் ஆர்ஜேடி கட்சி யின் நிறுவனர் லாலுபிரசாத்தின் இரண்டாவது மகனும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் கட்சியின் செயல் தலைவராக (Working President) தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளார். கட்சியின் தலைவராக தேஜஸ்வியே உள்ள நிலையில், ஆர்ஜேடி முழுக்கட்டுப்பாடும் அவரது கைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.
