tamilnadu

விவசாயத் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்!

விவசாயத் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்!

சென்னை, ஜன. 25 - விவசாயத் தொழிலாளர்களுக்கு என தனி  நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி மற்றும் எம். சின்னத்துரை ஆகியோர் விரிவான கோரிக்கைக் கடிதம் ஒன்றை வழங்கினர். தமிழ்நாட்டு விவசாயத் தொழிலாளர்களின் நிலை இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்கிறது. வேளாண்மைத் தொழிலில் உடலு ழைப்பைச் செலுத்தும் விவசாயக் கூலித்  தொழிலாளர்களின் வாழ்க்கை முறை இன்றள வும் பல சவால்களைக் கொண்டதாகவே இருக் கிறது. 2026ஆம் ஆண்டின் வளர்ச்சியில் விவ சாய வர்க்கத்தின் வாழ்க்கை முறையை மேம் படுத்திட முன்வர வேண்டிய அவசியம் அதி கரித்துள்ளது. வருமானத்தில் மிகப்பெரிய இடைவெளி தமிழ்நாட்டில் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளியின் சராசரி ஆண்டு வருமானம் 37  ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் வரை மட்டுமே  உள்ளது. உற்பத்தி மற்றும் இதர துறை களோடு ஒப்பீட்டளவில் பார்த் தால் இதைவிட மூன்று  முதல் பதினைந்து மடங்கு  வரை அதிகமானவற்றைப் பார்க்க முடிகிறது. இருப்ப திலேயே விவசாயக் கூலி தான் குறைவானதாக உள்ளது. விவசாயத்தை விட்டு விலகும் இளைஞர்கள் கடந்த ஆண்டுகளில் கிராமப்புற இளை ஞர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிக் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை வேலை களுக்கு மாறி வருகின்றனர். 2022-இல் 43 சத விகிதமாக இருந்த விவசாயம் சார்ந்த பணி கள் தற்காலத்தில் 22 சதவிகிதமாகக் குறைந்து உள்ளது. எனவே, எதிர்காலம் எதை நோக்கி  நகரும், எப்படி அந்தச் சவால்களை எதிர்கொள்ளப்  போகிறோம் என்பதற்கான திட்டங்களை உரு வாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. உடல்நலப் பிரச்சனைகளும் இடம்பெயர்வும் நிலையான வேலை இல்லாததால், பிழைப்புத் தேடி நகரங்களுக்கு இடம்பெயர் வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்வதால் வெப்பச் சோர்வு, மூட்டுவலி, முதுகுவலி, பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் தோல் நோய்கள் என உடல்நலப் பிரச்சனைகளால் பெரும் பாதிப்புகள் உருவாகின்றன. கடன் சுமையும் தற்கொலைகளும் பெரும்பாலும் முறை சாராத் துறையாக இருப்பதால், பணிப் பாதுகாப்பு, நிலையான விடுமுறை வசதிகள் கிடைப்பதில்லை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளின்போது விவசாயத் தொழிலாளர்களுக்குத்தான் நேரடி யாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குறைந்த வருமானம் மற்றும் மருத்துவச் செலவுகள், குடும்பத் தேவைகளுக்காக கந்து  வட்டிக்காரர்களிடமோ அல்லது நில உரிமை யாளர்களிடமோ கடன் வாங்கி அதனை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் தற்கொ லைகள் நீடிக்கின்றன. மகாத்மா காந்தி வேலையுறுதி திட்டத்தின் சிதைவு 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து  வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டம் (நூறு நாள் வேலை) முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. ஒன்றிய அரசின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை பிழைப்புக்கான போராட்டமாகவே நீடிக்கிறது.  இயந்திரமயமாக்கல் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலும் பொருளாதார நிலை யில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கலைஞர் காலத்தில் இருந்த  நல வாரியம் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் விவசாயத்  தொழிலாளர்களுக்கென்று தனி நல வாரியம்  அமைத்து மாநில வாரியத் திட்டங்கள் ஏற்ப டுத்திக் கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவிகள், இயற்கை மரணங்கள், ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளைத் தமிழ்நாடு அரசு வழங்கி வந்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதனை நீக்கிவிட்டு உழவர் பாதுகாப்புத் திட்டம் என மாற்றியமைத்தது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் நிலை தற்போது, முதலமைச்சரின் உழவர் பாது காப்புத் திட்டத்தில் முதன்மை உறுப்பினர்களாக 1 கோடியே 47 லட்சத்து 42 ஆயிரத்து 620 உறுப்பி னர்களும், சார்பு உறுப்பினர்களாக 1 கோடியே  35 லட்சத்து 85 ஆயிரத்து 25 உறுப்பினர்களும் என மொத்தம் 2 கோடியே 83 லட்சத்து 27 ஆயி ரத்து 644 நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் தற்போ தும் வீடுகள் இல்லாமல், குடிமனைப் பட்டா கிடைக்காமல், அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாமலும் சொல்லொணா துயரத்தில் உள்ளனர். விவசா யத் தொழிலாளர்களின் அடுத்த தலைமுறை வறுமையிலிருந்து விடுபட உதவிட வேண்டி யுள்ளது. உணவுப் பாதுகாப்பை  உறுதி செய்யும் தூண்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்களை வெறும் உழைப்பாளர்களாகப் பார்க்காமல் நாட்டின் உணவுப் பாதுகாப்பினை ஏற்ப டுத்தும் அடிப்படைத் தூண்களாகக் கருதி,  உரிய சமூகப் பாதுகாப்பும் சம நீதியும் வழங்கு வதே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நிரந்தரத் தேவையாகும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் விவ சாயத் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்கிடவும் “தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரி யம்” தனியாக அமைத்து ஒன்றரை கோடி தமிழக விவசாயத் தொழிலாளர்களின் வாழ்விற்கு ஒளி  ஏற்றிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.