மாதாந்திர உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையொட்டி சென்னை சுவாமி சிவானந்தா சாலையிலிருந்து முதலமைச்சரை சந்தித்து முறையிட தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
