tamilnadu

img

எத்தனால் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது ராஜஸ்தான் பாஜக அரசு கொலைவெறித் தாக்குதல் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்

எத்தனால் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது ராஜஸ்தான்  பாஜக அரசு கொலைவெறித் தாக்குதல் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்

புதுதில்லி எத்தனால் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போ ராடிய விவசாயிகள் மீது ராஜஸ்தான் பாஜக அரசு கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ள தற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ் தானின் ஹனுமன்கர் மாவட் டத்தில் உள்ள டிப்பி தாலுகாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையி லான மாநில அரசு, செழிப்பான 2 முதல் 4 போகம் பயிர் விளையும் விவசாய நிலத்தில் எத்தனால் ஆலையை அமைக்க உள்ளதாக அறிவித்தது. ஆலை அமைக்க சுமார் 40 ஏக்கர் நிலம் சண்டி கரைச் சேர்ந்த “டூன் எத்தனால் பிரை வேட் லிமிடெட் (Dune Ethanol Private Limited)” என்ற நிறுவ னத்தால் வாங்கப்பட்டுள்ளது. 2021 ஜூன் 16 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 1,320 கேஎல்பிடி (ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர்கள்) தானிய அடிப்படையிலான எத்த னால் ஆலையை, 40 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையத்து டன் நிறுவ அனுமதி அளித்தது. ஆலை அமைக்கும் தனியார் நிறுவனம் நிலம் தரும் விவசாயி களுக்கு அதிக இழப்பீடு அளிப்ப தாக அரசு மூலம் உறுதிப்படுத்த முயன்றது. ஆனால் செழிப்புமிக்க நிலத்தை பாழாக்க விரும்பாத விவசாயிகள், 2024 ஏப்ரல் முதல் 17 மாதங்களாக தொடர்ச்சியாக தர்ணா போராட்டம் நடத்தினர். ஆனால் ராஜஸ்தான் பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியமாகவும், கோரிக்கை களை கண்டுகொள்ளாமல் ஆலை அமைப்பது தொடர்பான ஏற்பாடு களை செய்து கொடுத்து வந்தது. இதனால் டிச.10 அன்று டிப்பி தாலுகா விவசாயிகள் மகா பஞ்சாயத்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். மகா பஞ்சாயத்துப் போராட்டத்தால் மிரண்ட ராஜஸ்தான் அரசு நவம்பர் 25 அன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. குறிப்பாக மகா பஞ்சாயத்து போராட்டத்திற்கு முன்பாக ஒரு பெரிய காவல்துறை படை முக்கியத் தலைவர்களைக் கைது செய்தது. 16 பேர் படுகாயம் :  40 பேர் கைது பல்வேறு தடைகளை எதிர் கொண்டு டிப்பி தாலுகாவில் உள்ள சுமார் 15 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் டிசம்பர் 10 அன்று மகா பஞ்சா யத்து போராட்டத்துக்குத் திரண்ட னர். ஆனால் கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களு க்குச் சேவை செய்வதற்காக மகா பஞ்சாயத்து மீது பெரிய அளவி லான வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டது ராஜஸ்தான் பாஜக அரசு. இந்த வன்முறையில் விவசா யிகள் ஈவு இரக்கமின்றி தாக்கப் பட்டனர். விவசாயிகளும் பதிலடி கொடுத்தனர். காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 16 பேர் பலத்த காயமடைந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். கண்டனம் இத்தகைய சூழலில், ராஜஸ் தான் விவசாயிகள் மீதான தாக்கு தலுக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம் தெரி விக்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசும், “இரட்டை எஞ்சின்” என்று கூறிக்கொள்ளும் மாநில அரசுகளும் தொடர்ந்து விவசாயிகளைத் தாக்கி, வளமான விவசாய நிலங்களை அபகரித்து வருகின்றன. கார்ப்பரேட் சக்தி கள் இந்தியாவை ஆழமான உணவு நெருக்கடிக்குள் தள்ள விரும்பு கின்றன. மேலும் அமெரிக்க எதேச் சதிகார கார்ப்பரேட் ஏகபோகங்க ளுக்குச் சாதகமான, மிக பார பட்சமான சுதந்திர வர்த்தக ஒப் பந்தங்கள் (FTAs) மூலம், வரி யில்லாமல் அமெரிக்காவிலிருந்து உணவு தானியங்களை இறக்கு மதி செய்யுமாறு மோடி அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக் கிறது. செழிப்புமிக்க நிலத்தை பாலைவனமாக மாற்ற சதி உணவு தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கு, அரைப்பதற்கும் (mashing) புளிக்க வைப்பதற்கும் (fermen ting) அதிக அளவில் நிலத்தடி நீர் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் எத்த னால் தயாரிக்க, சுமார் 10 முதல் 17 லிட்டர் தண்ணீர் தேவைப்படு கிறது. ஆலையின் கொள்ளள விற்கு ஏற்ப ஒரு நாளைக்கு 13,20,000 லிட்டர்கள் தேவை என்பதால், தொழிற்சாலை அந்த அளவை விட 10 முதல் 17 மடங்கு நிலத்தடி நீரை உறிஞ்ச வேண்டியிருக்கும். குறிப்பாக ஆலை அமைய வுள்ள பகுதி வளமான காக்கர் ஆற்றுப் படுகையாகும். இது மழை நீரைச் சார்ந்துள்ள, இடைப்பட்ட நதியாகும். வெள்ளம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள விவ சாயிகள் 2 முதல் 4 போக பயிர்க ளையும் மற்றும் கால்நடை வளர்ப்பி லும் ஈடுபடுகிறார்கள். இது ராஜஸ்தானின் ஒரு சில பசுமை யான பகுதிகளில் ஒன்றாகும். மேலும் லட்சக்கணக்கான மக்க ளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கு கிறது. இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு என்ற வழக்கமான பேச் சால் காக்கர் ஆற்றுப் படுகையை சூறையாட பாஜக அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் இழப்பீடு, வேலைவாய்ப்பு குறித்த கார்ப்பரேட் சார்பு அரசாங்கத்தின் நம்பிக்கையிலிருந்து கடந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் மக்கள் திடீரென்று விழித்துக் கொண்டனர். தங்களின் தற்போ தைய வாழ்வாதாரமும் முற்றிலும் பயனற்ற நிலமாக மாறும் என் பதை விவசாயிகளும், மக்களும் உணர்ந்து போராடி வருகின்றனர். மோடி அரசுக்கு எச்சரிக்கை இதனால் ராஜஸ்தானில் எத்த னால் ஆலைக்கு எதிரான விவசாயி களின் போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி முழு ஆதரவை வழங்குகிறது. மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதற்கும், எரிந்து கொண்டி ருக்கும் விவசாயப் பிரச்சனை கள் மீது அலட்சியமாக இருப்ப தற்கும் எதிராக, பாஜக தலைமையி லான ஒன்றிய அரசையும், மாநில அரசுகளையும் ஐக்கிய விவசாயி கள் முன்னணி கடுமையாக எச்ச ரிக்கிறது. தொழில்துறை நோக் கங்களுக்காக விவசாய நிலங்க ளை மாற்றுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கை யை ஐக்கிய விவசாயிகள் முன் னணி மீண்டும் வலியுறுத்துகிறது. ராஜஸ்தானின் பஜன்லால் சர்மா அரசாங்கம் கைது செய்யப் பட்ட அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுவிக்க வேண் டும். காயமடைந்த அனைவருக் கும் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளின் அனைத்து தீவிரமான கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கைக் குழுவு டன் விவாதிக்க வேண்டும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி வலியுறுத்துகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.