ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு!
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு பிரிவில் குண்டு துளைக் காத 2 வாகனங் களைச் சேர்த்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சக மானது, ஏற்கெனவே கடந்த 2023 ஆம் ஆண்டு அமைச்சர் ஜெய்சங்க ரின் பாதுகாப்பை, ‘ஒய்’ பிரிவில் இருந்து ‘இசட்’ பிரிவாக உயர்த்தியது. அதன்படி ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) விஐபி பாதுகாப்பு பிரிவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பை வழங்கி வருகிறது. தற்போது 70 வயதான ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்ச கத்தின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கி வருகிறார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து அவர் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்படும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு குறித்து, ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் சமீபத்தில் ஆய்வு செய்து அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் குண்டு துளைக்காத வாகனங்களை சேர்க்க பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்புடன் குண்டு துளைக்காத இரண்டு வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் அவரது வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.