tamilnadu

img

மழையால் சேதமடைந்த பாதாள சாக்கடை தொட்டி புதிதாக புனரமைப்பு

மழையால் சேதமடைந்த பாதாள சாக்கடை தொட்டி புதிதாக புனரமைப்பு

ராணிப்பேட்டை,அக். 25 - நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுணமல்லி ஊராட்சி, சம்பத்துராயன்பேட்டை கிராமம் விநாயகபுரம் தெருவில் சுமார் 25 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி இரண்டு இடங்களில் சமீபத்திய கனமழையால் அடைப்பு ஏற்பட்டு மேல் சிலாப் உடைந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர். தகவல் அறிந்த நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக இரண்டு இடங்களிலும் புதிதாக கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியை மேற்கொண்டார். சிறுண மல்லி ஊராட்சி மன்ற தலை வர் ஜோதி அருணாச்சலம், புருஷோத்தமன், தங்கராஜ், சூரியகுமார், ஞானமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.