ரானெக்ஸ் 2025 தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி தொடக்கம்
ராணிப்பேட்டை, அக். 25- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்கள் ஏற்பாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் RANEX 2025 தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி வெள்ளியன்று ராணிப்பேட்டையில் தொடங்கியது. இதனை அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகியோர் ராணிப்பேட்டை சிப்காட் பிரீமியர் லெதர் நிறுவன வளா கத்தில் தொடங்கி வைத்தனர். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 55 பயனாளி களுக்கு ரூ.65.65 லட்சம் மதிப்பீட்டில் மானியத் தொகைக்கான ஆணையை வழங்கினர். 130க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் புதிய உற்பத்தி பொருட்கள், நவீன இயந்திரங்கள், நவீன உத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் கருத்தரங்கம் மற்றும் வாங்குபவர் - விற்பனையாளர் இடையே ஒப்பந்தம் நடை பெறவுள்ளது. முதலமைச்சர் பனப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் நிறு வனம் ஜனவரி 2026க்குள் தொழில் உற்பத்தி தொடங்கவுள்ளதாகவும், இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. ராணிப்பேட்டை முன்மாதிரி மாவட்டமாகவும், தொழில் நகரமாகவும் மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வாழ்த்துரையாற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
