tamilnadu

img

பொது சுகாதாரத்தை பேணி காக்கவேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பொது சுகாதாரத்தை பேணி காக்கவேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை, அக்.25 -  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் சனிக்கிழமை மாவட்டத் தலைவர் ம.எழில் இளம்வழுதி தலைமையில் வாலாஜாவில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் இரா.இராஜசேகர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெ.மகேஸ்வரி வரவேற்றார். மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் வே.பர்சிலா வான சாஸ்திரி வேலை அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் மு.ஆனந்தபாபு நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். மாவட்ட துணை தலைவர் சு.சரவணன், இணை செயலாளர்கள் சு.தீபா, தணிக்கையாளர் கீதா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். கல்வித்துறை முன்னாள் மாநில தலை வர் அ.சேகர், சத்துணவு முன்னாள் மாநில செயலாளர் த.முரளிதாஸ், வருவாய் துறை மாவட்ட பொருளாளர் கன்னியப்பன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மாநில அலுவலக கட்டிடம் முதல் தவணை ரூ.2,000-ஐ மாவட்ட பொருளாளர் மாநில செயலாளர் வே.விஜயகுமாரிடம் வழங்கி னார். முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.ஜோசப் கென்னடி பணி நிறைவு பாராட்டு கவுரவிக்கப்பட்டார். மாநில செயலாளர் வே.விஜயகுமரன் நிறைவுரை நிகழ்த்தினார். மாவட்ட தணிக்கையாளர் சோ.கோடீஸ்வரி நன்றி கூறினார். தீர்மானம்  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், 7வது ஊதிய மாற்றத்தின் 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநகராட்சி தினக்கூலி ஓட்டு நர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பொது சுகாதார வசதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.