உழைக்கும் மக்களின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது! சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு
சென்னை, அக். 25 - உழைக்கும் மக்களின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். 1.8.2025 முதல் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 5, 6வது மண்டல தூய்மைப் பணி யாளர்களுக்கு மீண்டும் பழைய நிலையில், மாநக ராட்சியிலேயே பணி வழங்க வேண்டும், தேர்தல் வாக் குறுதி 153, 285ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முதலமைச்சர் தலையிட்டு தூய்மைப் பணியாளர் களுடைய பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி 86 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில் சென்னை எழும்பூரில் சனிக்கிழமையன்று (அக்.25) உண்ணாநிலைப் போராட் டம் நடைபெற்றது உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட் டத்தை நிறைவு செய்து பெ.சண்முகம் பேசிய தாவது: சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவைய டுத்து அதிகார வர்க்கம் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை சீர்கு லைத்தது. அதனை கண்டித்து அடுத்தநாளே மார்க்சிஸ்ட் கட்சி கண்டன போராட்டத்தை நடத்தியது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற போராடுகிற உரிமை ஆட்சி யிலிருக்கிறவர்களின் கருணையினால்தான் கிடைக்கும் என்றால் அது உழைப்பாளி மக்களுக்கு ஆபத்தானது. உயிர்வாழு கிற உரிமையையும் அரசியலமைப்புச்சாசனம் கொடுத்துள்ளது. சுதந்திர மாகவும், கவுரவமாகவும் வாழ வேண்டுமென்றால் நிரந்தர வேலையும், சட்டப்பூர்வமான ஊதியமும் தேவை. அதைக்கேட்டும், அரசாங்கம் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்தக் கோரியும் போராடுகிறோம். அரசு தவறான கொள்கை முடிவெடுத்துவிட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிறார்கள். தவறை உணர்ந்து அரசு சரி செய்ய வேண்டும். போராடு கிறவர்களுக்கு அரணாக அரசு இருக்க வேண்டும். மாறாக, அரசின் அணுகு முறை கடுகளவும் ஏற்க முடியாது. உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வாக்குறுதிக்கு மாறாக அரசு நடந்து கொண்டது. 86 நாட்களை கடந்தும் போராட்டம் நடை பெறுவதற்கு காரணம் அரசு அணுகுமுறைதான் காரணம். இன்றைக்கு உண்ணாநிலை முடிந்தா லும், கோரிக்கைகள் நிறை வேறாமல் முடிவடையாது. ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார கொள்கையைத்தான் திமுக அமல்படுத்துகிறது. அதற்கெதிராக தொழி லாளர்கள் போராடும் போது அதை சரி செய்யா விடில், அரசுக்கு எதிரான மனநிலைதான் மக்க ளிடத்தில் அதிகரிக்கும். ஒன்றிய அரசுக்கு எதிரான திமுகவின் நட வடிக்கைககளை சிபிஎம் ஆதரிக்கிறது. அதே நேரத்தில், உழைக்கும் மக்க ளின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடி யாது. தொழிலாளர் பிரச்சனைகளில் அரசின் அணுகுமுறையால், இது தொழிலாளர் நல அரசு என்று சொல்ல முடி யாத சங்கடத்தை ஏற்படுத்து கிறது. இந்த தொழிலாளர் கள் இல்லாமல் இந்த அரசு இல்லை, இந்த தொழிலாளர்கள் வாக்க ளிக்காமல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது சாத்திய மில்லை. தலைமுறை தலை முறையாக தூய்மை பணியாளர்களாக நீடிக்க வேண்டும் என்று பணி நிரந்தர கோரிக்கையை முன்வைக்கவில்லை. தூய்மைப்பணி எந்திர மயமாக்க வேண்டும். அண்மையில் முதல மைச்சரை சந்தித்தபோது, தூய்மைப்பணியை எந்திரமயமாக்க தூய்மை பொறியியல் துறையை அண்ணா பல்கலைக் கழகத்தில் உருவாக்க கோரினோம். அப்போது தலைமைச்செயலாளர் முருகானந்தம், முதல மைச்சர் உத்தர விட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று தெரிவித்தார். எனவே, தற்போதுள்ள தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும், அத்துக் கூலி, பணி பாதுகாப்பு கிடையாது, எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்ததாரரால் வெளி யேற்றப்படுவார்கள் என்ற நிலையை ஏற்க முடியாது. தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகள் முழுமை யாக வெல்வதற்கு மார்க்சி ஸ்ட் கட்சி துணைநிற்கும். இவ்வாறு அவர் பேசி னார். முன்னதாக போராட் டத்தை விசிக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன், நா.பெரியசாமி (சிபிஐ), பழ.ஆசைத்தம்பி (சிபிஐ–எம்எல்.எல்), எஸ்.குமார சாமி (ஏஐசிசிடியு), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) உள்ளிட்டோர் போராட்ட த்தை ஆதரித்துப் பேசினர்.
