tamilnadu

img

மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்ற நடவடிக்கை: மேயர் பிரியா உறுதி!

மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்ற நடவடிக்கை: மேயர் பிரியா உறுதி!

சென்னை, அக்.25 - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மிக்ஜாம் புயல் போன்ற நிலையில் 40 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தாலும் சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபுவுடன் துறைமுகம் தொகுதி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.  கடந்த 20, 21 தேதி களில் 6 சென்டிமீட்டர் மழை பதிவானதையடுத்து, ஒவ்வொரு வீடாகச் சென்று குடியிருப்போரின் கோரிக்கைகள் கேட்டு நிவாரண நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சுமார் 2 ஆயிரம் இடங்களில் கண்டறியப்பட்ட பள்ளங்களை வார்டு வாரி யாக ஒதுக்கப்பட்ட நிதியில் தற்காலிகமாக சரிசெய்யும் பணி நடைபெற்று வரு வதாகவும் மேயர் தெரி வித்தார்.  மழை முடிந்த பின் ஜனவரியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும், 206 தாழ்வான பகுதிகளில் 100 எச்பி மோட்டர்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். அதிக மழை பெய்யும் பட்சத்தில் தாழ்வான பகுதி மக்களை சமுதாயக் கூடங்கள், பள்ளிகளில் தங்கவைத்து உணவு, குடிநீர், மருத்துவ வசதி கள் வழங்க ஏற்பாடு செய்யப்  பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.