tamilnadu

img

உலக போலியோ தினம் 2025 விழிப்புணர்வு முகாமுடன் கொண்டாட்டம்

உலக போலியோ தினம் 2025 விழிப்புணர்வு முகாமுடன் கொண்டாட்டம்

சென்னை, அக். 25,  போலியோவை ஒழிக்கும் தன் உறுதி யான முயற்சியை வெளிப்படுத்தும் வகை யில், சென்னை மெட்ரோ நிலையங்களில் ரோட்டரி மாவட்டம் 3234,  விழிப்பு ணர்வு முகாமை நடத்தியது. இதன் முக்கிய நிகழ்ச்சி ஆலந்தூர் மெட்ரோ நிலை யத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் ஏ.கே.எஸ். வினோத் சரோகி மற்றும் மாவட்ட போலியோ குழு இதை முன்னெடுத்தனர். இம்முகாம் சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்துடன்  இணைந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மெட்ரோ கட்டுமான பிரிவு முதன்மை பொதுமேலாளர் எஸ். அசோக் குமார் கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் மாவட்ட   ரோட்டரி சங்க நிர்வாகிகள் என்.எஸ். சரவணன்  மாவட்டத் தலைவர் ஜி.பழனி, முகாமின் நடவடிக்கை களை முன்னெடுத்தனர். வினோத் சரோகி பேசு கையில் “போலியோவை உலகளவில் முற்றிலும் ஒழிப்பதே ரோட்டரியின் நீண்டகால இலக்கு. ரோட்டரியின் End Polio முயற்சி பலரையும் ஒன்றி ணைத்து செயல் பட தூண்டுகிறது. இந்த விழிப்புணர்வு முகாம், ஒவ்வொரு குழந்தையை யும் இந்தத நோயிலிருந்து பாதுகாக்கும் எங்கள் உறுதியை வெளிப்படுத்து கிறது,” என்றார்.