மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நிய மனம் தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதல் கள் அப்பட்டமான சட்ட மீறல் என்று முன்னாள் மக்களவை பொதுச் செயலாள ரும் அரசமைப்பு நிபுணருமான பிடிடி ஆச்சாரி கூறியுள்ளார். 1956 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தால் நிறைவேற்றப்பட்ட யுஜிசி சட்டம், துணைவேந்தர்களை நியமிக்கும் அதி காரத்தை யுஜிசிக்கு வழங்கவில்லை என்றும், வரைவு வழிகாட்டுதல்கள் அரச மைப்பிற்கு விரோதமானவை என்றும் அவர் தேசாபிமானி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம், 1994 ஆம் ஆண்டு அளித்த தனது தீர்ப்பில், யுஜிசி-க்கு பரிந்து ரைகளை வழங்க மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், மாநிலங்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டா யம் இல்லை என்றும் தெளிவுபடுத்தி யது. பல்கலைக்கழகக் கல்வியை ஒருங்கி ணைத்தல், கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கே யுஜிசி பொறுப்பாகும். யுஜிசி வரைவு வழிகாட்டுதல்கள் 1956 சட்டத்துக்கு முரணானவை பல்கலைக்கழகத்தின் கல்வி விவகா ரங்களின் நிர்வாக அதிகாரி துணை வேந்தர் ஆவார். சட்டத்தில் துணை வேந்தர் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. யுஜிசி சட்டத்தின் பிரிவு 26 இன் படி, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு உட்பட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் விதிகளை மட்டுமே யுஜிசியால் வெளியிட முடியும். 2025 ஆம் ஆண்டு வரைவு வழிகாட்டுதல்கள் 1956 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முரணானவை. மாநில சட்டமன்றங்களால் நிறை வேற்றப்பட்ட மசோதா, குடியரசு தலை வர் அல்லது ஆளுநர் கையெழுத்திட் டால் சட்டமாக மாறும். மாநிலத்தால் இயற் றப்பட்ட பல்கலைக்கழகச் சட்டத்திற்கு எதிராக ஒரு விதி பிறப்பிக்கப்பட்டால், அது செல்லாது. அரசமைப்பின் 254 ஆவது பிரிவு, ஒரு மசோதா சட்டமாகி, குடி யரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் கையொப்பத்தைப் பெற்றவுடன் மாநிலத்தில் அமலுக்கு வரும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பின்னர் செய்யப்படும் விதிமுறைகள் சட்டத்தி ற்கு உட்பட்டவை அல்ல என்றும் அவர் கூறினார்.