காரைக்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
சிவகங்கை, அக்.2 – அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் (சிஐடியு) முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 46-வது நாளாக காத்திருப்பு போராட்டம் காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவல கம் முன்பு நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் தெய்வீர பாண்டியன், மண்டல பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமையேற்றுள்ளனர்.
தொழிற்பேட்டையில் தீ விபத்து: புகையால் பொதுமக்கள் அவதி
ஒட்டன்சத்திரம், அக்.2 – திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தண்ணீர் பந்தம்பட்டி தொழிற்பேட்டையில் செயல்படும் ஒரு தனி யார் எரிபொருள் (பிஸ்கெட்) தயாரிப்பு தொழிற்சாலை யில் வியாழனன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. மூலப்பொருட்கள் தீப்பிடித்து 3 மணி நேரம் எரிந்த தால் கரும்புகை சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளி லும் பரவி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத் திணறி அவதியுற்றனர். தீயணைப்பு கருவிகள் இல்லாத தால் பல லட்சம் மதிப்புள்ள எரிபொருட்கள் நாசமானது. தகவல் கிடைத்ததும் வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி னர். எரியோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து ஓட்டுனருக்கு நெஞ்சுவலி பெரும் விபத்து தவிர்ப்பு
சின்னாளப்பட்டி, செப்.2 – திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து 92 பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் பாலகுருவுக்கு (54) செம்பட்டி அருகே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் சித்தையன்கோட்டை அரசு சுகாதார நிலையம் அருகே பேருந்தை நிறுத்தி மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்றார். பின்னர் 108 அவசர ஊர்தி யில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். இதையடுத்து பேருந்தை மற்றொரு ஓட்டுநர் செம்பட்டி வரை ஓட்டி கொண்டு வந்து, பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஓட்டுநர் தன்னுடைய உடல் நிலையை உணர்ந்து முன்கூட்டியே சிகிச்சை பெற்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
காலமானார்
சிவகங்கை, அக்.2- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய குழு உறுப்பினர் வி.சௌந்தரபாண்டியன் மனைவி இருளாயி (55) உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வு திருப்புவனம் அவரது இல்லத்தில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தி செலுத்தப்பட்டது.
வியாபாரியிடம் நகை, பணம் திருடிய வழக்கில் ஒருவர் கைது
நத்தம், அக்.3– திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி-தேத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் (31), காய்கறி வியாபாரி. கடந்த ஜூலை 17 ஆம் தேதி வத்தி பட்டிக்கு இரு சக்கர வாகனம் மூலம் செல்லும் போது, பேட்டைக்குளம் பகுதியில் 3 பேர் வழிமறித்து, அவரிடம் இருந்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.10,000 பணத்தை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜாங்கம் நத்தம் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கி டையில் சம்பவத்தில் தொடர்புடைய லிங்கவாடி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் (20) ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பரளிபுதூரை சேர்ந்த வீரணன் (21) சம்ப வத்தில் தொடர்புடையவர் என போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. அதன்பேரில் வீரணன் வீட்டில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை
சின்னாளப்பட்டி, அக்.2 – திருச்சி புனித வளனார் (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இதை யொட்டி நடைபெற்ற கலை மற்றும் இலக்கியப் போட்டி களில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தின் தமிழ்த்துறை, கல்வியியல் துறை மாணவர்கள் சிறந்து விளங்கினர். வினாடிவினா, கவிதை, நாடகம், குழு நடனம் உள்ளிட்ட போட்டிகளில் பல பரிசுகளை வென்ற அவர்கள், 50க்கு 41 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர். வெற்றியாளர்களுக்கு பல்கலைக்கழகத் துணை வேந்தர் ந.பஞ்சநதம், பதிவாளர் (பொ) மா.சுந்தரமாரி, தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார், கல்வியியல் துறைத் தலைவர் பி.எஸ்.ஸ்ரீதேவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.