சென்னை,ஜன.31- தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இந்து சமய அறநிலையத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய்நாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக இருந்த பூங்கொடி வணிகவரி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியராக சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகாராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம். திருவாரூர் ஆட்சியராக சிவசௌந்தரவள்ளி, சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப் பட்டுள்ளார். தொழில் நுட்பக் கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஏ.ராமன் தொழிலாளர் நலத்துறை ஆணையராகவும் துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவுக்கு கூடுதலாக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சித்ரா விஜயன் மதுரை மாநகராட்சி ஆணையராகவும் தாரேஸ் அகமது – தமிழ்நாடு கைடன்ஸ் துறை மேலாண் இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.