tamilnadu

img

கார்ப்பரேட்களுக்கு வழி அமைப்பதற்காக யுஜிசி வரைவு அறிக்கை வெளியீடு

திருநெல்வேலி, ஜன.31 - பல்கலைக்கழக மானியக்குழு வரைவு அறிக்கை-2025 குறித்து ‘அதிகார குவிப்பும் உரிமை பறிப்பும்’ என்ற தலைப்பில், திருநெல் வேலியில் வியாழனன்று இந்திய சமூக விஞ்ஞான  கழகம் மற்றும் மூட்டா இணைந்த கருத்தரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கத்தின் கோட்டத் தலைவர் செ.முத்துக் குமாரசாமி தலைமை வகித்தார். பேரா.பொன்னு ராஜ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி ஊழியர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் சிவசங்கர் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க முன்னாள் தலைவர் பேரா.ஜேம்ஸ் வில்லியம், எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரன் பேசியதாவது: புதிய கல்விக் கொள்கையின் நீட்சியாக, ஒன்றிய அரசு யுஜிசி வரைவு அறிக்கையை வெளி யிட்டு உள்ளது. யுஜிசி அறிக்கைக்கு எதிராக, தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. வேந்தராக ஆளுநர் செயல்பட  தேவையில்லை என தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை யுஜிசி பறிக்கிறது.  இசைக் கல்லூரிக்கு இசை ஞானம் இல்லா தவரை துணைவேந்தராக நியமிக்கலாம் என  அறிக்கை கூறுகிறது. உயர்கல்வியை வகுப்புவாத மயம், தனியார்மயமாக்கும் முயற்சிதான் இந்த  வரைவு அறிக்கை. கல்வி குறித்த தொலைக் காட்சி விவாதத்தில், “உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளை ஏற்ற பின், புதிய கல்விக் கொள்கையை ஏற்கத்தான் வேண்டும்” என வலதுசாரி ஆதரவாளர் கூறினார்.

சேர்க்கை விகிதம் குறைந்தது ஏன்? 

உயர்கல்வியில் சேர நுழைவுத் தேர்வு அவசி யம் என அறிக்கை கூறுகிறது. இதனால் பள்ளிக்  கல்வியின் தரம் குறையும். நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் லாப நோக்கோடு புற்றீசல் போல உருவாகும். அனைவருக்கும் கல்வி என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்றால், கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஏன் 2.8  சதவீதம் குறைந்தது. அதாவது 2 கோடி மாண வர்கள் பள்ளியில் இருந்து விலகி இருக்கிறார்கள்.  அதேபோல இந்திய உயர்கல்வி சேர்க்கை விகிதம் 28 சதவீதம் எனில், அது தமிழகத்தில் 48 சதவீதமாக உள்ளது. தமிழகத்திற்கு புதிய கல்விக் கொள்கை தேவை இல்லை. 16 சதவீத மாக இருக்கும் உத்தரப்பிரதேசத்திற்கு தேவை.  மாநில உரிமை மற்றும் கூட்டாட்சிக்கு எதிராக உள்ளது இந்த வரைவு அறிக்கை. கல்வியாளர்  அல்லாதவரை, துணைவேந்தராக நியமிக்கலாம்  என்ற முடிவு ஆர்எஸ்எஸ் ஆட்களை கல்வித்துறை யில் புகுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.  தொழிலாளர் சட்டத் தொகுப்பு, வேளாண் மசோதா, 370 சிறப்புப் பிரிவு ரத்து, ஒரே நாடு ஒரே  தேர்தல் என்பனவற்றின் தொடர்ச்சிதான் யுஜிசி வரைவு அறிக்கை. இதனை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்றார்.

தகுதியில்லாதவர்களை பதவிகளில் நியமிக்க...

பேரா.ஜேம்ஸ் வில்லியம்ஸ் (முன்னாள் தலைவர், அய்பெக்டோ) பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் செய்த வேலை,  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பொறுப்பிலிருந்த கல்வியாளர்களை, விஞ்ஞானி களை, உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியா ளர்களை நீக்கிவிட்டு தகுதியில்லாத, திறமை யில்லாத, ஆய்வுப் பின்புலமில்லாத, அறிவு கொள்கைத் தொடர்பில்லாத தங்கள் ஆதரவா ளர்களை நியமித்ததுதான்.   உதாரணத்திற்கு, புனேயிலுள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பதவி - ஆர்.கே.லக்ஷ்மண், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபால கிருஷ்ணன், மகேஷ் பட், கிரிஷ் கர்னாட் போன்ற தலைசிறந்த திரை வல்லுநர்கள் வகித்த பதவி. அந்தப் பதவி யில் கஜேந்திர சௌகான் என்ற எந்தவித பின்புலமும் இல்லாத நபரை நியமித்தது பாஜக. அவரை நீக்கக் கோரி, அந்த நிறுவனத்தின் மாணவர்கள் பல மாதங்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.  அதேபோல் இந்திய சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக எஸ்.பிரகாஷ்  குமார் என்பவரை நியமித்தது. இவர் இளங்கலைப்  பட்டப்படிப்புக்கு வேதியியல் கற்பித்த ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர். வேதியியலுக்கும் சமூக அறி வியலுக்கும் என்ன சம்பந்தம்? இதேபோல் இந்திய கலாச்சார ஆய்வுக் கழகத்தின் தலைவ ராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வினய் சகஸ்ரபுத்தே என்பவரை நியமித்தனர்.  இதன் உச்சகட்டமாக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக ஒய்.சுதர்சன்  ராவ் என்பவரை நியமித்தனர். நம் பல்கலைக்கழ கங்களில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக் கையை சமர்ப்பிக்கையில், குறைந்தபட்சம் 2 ஆய்வுக் கட்டுரைகள், சம ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு இதழ்களில் வெளி யிட்டிருக்க வேண்டும் என்பது விதி. சாதாரண மாக, நம் கல்லூரி ஆசிரியர்கள் இதுபோன்ற பல  ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பர். ஆனால் அப்படிப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், ஒன்றுகூட சுதர்சன்ராவ் எழுதியதில்லை. அவர் பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை, உலகள வில் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுப் பேராசிரி யர்களான ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், சரத் சந்திரா போன்ற 22 பேர் கொண்ட இந்திய வரலாற்று ஆய்விதழின் ஆலோசனைக் குழு வைக் கலைத்ததுதான். இதுதான் இவர்கள்  கல்வித் தரத்தை உயர்த்த சிறந்த கல்வியா ளர்களை தேர்ந்தெடுக்கும் லட்சணம். தற்போது வெளியிடப்பட்டுள்ள யுஜிசி வரைவு  விதிமுறைகளில், கல்வி புலம் சாராத கார்ப்பரேட் உலக பெரிய மனிதர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் வழிகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அவர் பேசினார். பேராசிரியர் கோமதி நாயகம் நன்றி கூறி னார்.