tamilnadu

img

பழங்குடி சான்று கேட்டு நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்

மதுரை மாவட்டம் சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு பழங்குடி சான்றிதழை மறுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக வியாழனன்று நள்ளிரவு வரை நீடித்த காத்திருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மலைவாழ் மக்கள் சங்கத் தலைவருமான பி.டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். காவல்துறையின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்த தலைவர்கள், கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் விரைவில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.