ஜன.23இல் வேலை நிறுத்த தயாரிப்பு மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு
திருச்சிராப்பள்ளி, ஜன.11- ஜன.23இல் வேலை நிறுத்த தயாரிப்பு மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த தொழிற்சங்கங்கள், விசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட மாநாட்டில் முடி வெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள் இணைந்து பிப்.12இல் அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்த, திருச்சி மாவட்ட தயாரிப்பு மாநாடு புத்தூர் நால்ரோடு சண்முகா திருமண மண்ட பத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்த மாநாட்டில், தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பு அமல்படுத்தும் அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் ; 12 ஆண்டு காலமாக கூட்டப்படாத தொழிலாளர் மாநாட்டை கூட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களுடன் வேலை நிறுத்த பிரச்சார பரப்புரை ஜன 30இல் இருந்து பிப்.6 வரை தெருமுனை கூட்டங் கள் மற்றும் நடைபயணம் மூலம் தொழிலாளர், விவ சாயிகள் சந்திப்பு பிரச்சா ரம் செய்வது, பிப்.,12ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் ஒன்றிய அரசு அலு வலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப் பட்டது. மாநாட்டில், தொமுச மாவட்ட கவுன்சில் செயலா ளர் ஜோசப் நெல்சன் தலை மை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். ஏஐடியுசி வட்டத் தலை வர் நடராஜா, ஐஎன்டியுசி வெங்கட் நாரயணன். எச்எம்எஸ் ஞானதுரை, ஏஐசிசிடியு ஞானதேசிகன், எல்எல்எப் விஜய் பாலு, யுடியுசி சிவசெல்வன். சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத், ஐக்கிய விவசாயி கள் முன்னணி அயிலை சிவ சூரியன். தொமுச மாவட்ட தலைவர் குணசேகரன், பிஎச்இஎல் தீபன், பரமசிவம் ஆகியோர் பேசினர். எல்பி எப் லோகநாதன் நன்றி கூறினார்.
