tamilnadu

img

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு

சின்னாளப்பட்டி, அக்.25- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகு திகளில் சுமார் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் தக்காளி பயிரி டப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் விளைந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம், தேவத் தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்த யம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வட காடு, பால்கடை, பெத்தெல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட சந்தைக ளுக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பெரிய அளவில் தக்கா ளிகளை வாங்கிச் செல்வர். ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தக்காளி விளைச்சலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் கார ணமாக சந்தையில் தக்காளி விலை பெரிதும் உயர்ந்துள்ளது. முந்தைய மாதம் (செப்டம்பர்) 14  கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை ரூ.130 முதல் ரூ.150 வரை இருந்தது. தற்போது அதே பெட்டி விலை ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி விலை ரூ.50 வரை உயர்ந்துள்ளது. தொடர்ச்சி யான மழையால் பயிர்கள் சேதம டைந்ததால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர்.