tamilnadu

தீக்கதிர் வாசகர் வட்ட பயிற்சி பட்டறை

பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டத்தின் நான்காம் ஆண்டு  தொடர் அரசியல் வகுப்பு நிகழ்ச்சி, சனிக்கிழமை பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடை பெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக “அறி வோம் அரசியல்” என்ற தலைப்பில் நடைபெற்ற வகுப்பில் இந்திய மாணவர்  சங்க மாவட்ட செயலாளர் ராம கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை  தலைமை வகித்தார். நிகழ்வில் “பாசிசமும் கார்ப்ப ரேட்டுகளும் கைகோர்த்துள்ள நிலை யில் என்ன  செய்ய உத்தேசம்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா. சிந்தன் கருத்துரை வழங்கினார். நகர செயலாளர் இன்பராஜ் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் மருத்துவர் கருணாகரன், அகஸ்டின், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எழுத்தாளர் இரா.எட்வின், சமூக செயல்பாட்டாளர் டாக்டர். ஜெய லட்சுமி, தி.க நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.