tamilnadu

img

ஜானகி ரகுராமன் - அ.குமரேசன்

நீதிமன்றத்தை நாடி மணமுறிவு கோருவது அதிகரித்துவிட்டது, இது ஒரு பண்பாட்டுச் சீரழிவு என்று தாக்குகிறவர்கள் இருக்கிறார்கள். கட்டாயமான மன உளைச்சல்களிலிருந்தும் பாரம்பரிய அடிமைத்தனங்களிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரு சட்டப்பூர்வ வாயில்தான் மணமுறிவு என்று புரிந்துகொண்டு ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்களுக்கு இது ஒரு பெரிய வலி நிவாரணி. “குடும்பம் என்றால் பிரச்சனை கள் இருக்கத்தான் செய்யும். அதை யெல்லாம் அனுசரித்துக்கொண்டுதான் சேர்ந்து வாழ வேண்டும்.  இந்தக் காலத்  தில் முணுக்கென்றால் டைவர்ஸ் கேட்டு  மனுப்போடுகிறார்கள். இப்படி எதற்கெ டுத்தாலும் டைவர்ஸ்தான் வழியென்று போனால் குடும்பம்   என்ற கட்டமைப்பே  சிதைந்துபோகும். சமூகமே சீரழிந்து விடும்,” என்ற பேச்சுகளைப் பரவலாகக்  கேட்க முடியும். அனுசரித்துக்கொண்டு தான் போக வேண்டும் என்று அறி வுறுத்தப்படுகிறவர்கள் ஏன் பெரும் பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்று யோசித்தால் பல தெளிவுகள் பிறக்கும். அப்படி யோசிக்க வைக்கிற குறும்படம்தான் ‘ஜானகி ரகுராமன்’. ஒரு மூத்த வழக்குரைஞரான தந்தை யும் இளம் வழக்குரைஞரான மகளும் வீட்டில் இருக்கிறபோது, 55 வயதுப் பெண்மணி ஒருவர் அவர்களைச் சந்திக்க  வருகிறார்.  தனக்கு மணமுறிவு பெற்றுத்  தருமாறு கோருகிறார்.

இந்த வயதில் இப்படியொரு கோரிக்கையா? அதிர்ச்சியும் ஆச்சரிய மும் அடைகிற அப்பாவும் மகளும் கார ணத்தை வினவுகிறார்கள். கணவர் கொடு மைப்படுத்துகிறாரா? வேறு தொடர்பு களோடு இருக்கிறாரா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் இல்லை என்ற பதிலை அளிக்கிற அந்தப் பெண், கடைசி யில் “முப்பது வருஷ ரொட்டீன்” ஆகி விட்ட உண்மைக் காரணத்தைக் கூறு கிறார். எடுத்த எடுப்பில் அந்தக் காரணம் வலு வற்றதாகத் தோன்றுகிறது. இதெல்லாம் எல்லாக் குடும்பங்களிலும் இயல்பான ஒன்றுதானே, இதற்காக மணமுறிவு கோர முடியுமா, நீதிமன்றம் அதை ஏற்குமா  என்றெல்லாம் மூத்த வழக்குரைஞர் கேட்பது, சமூகத்தின் பொதுக் கேள்வி யாக எதிரொலிக்கிறது. ஆயினும், “இல்லப்பா, இதுவும் வன்முறைதான்” எனக்கூறும் மகள், அந்தப் பெண்ணின்  வழக்கைத் தானே எடுத்து நடத்து வதாகத் தெரிவிக்கிறாள்.

பெண் கூறும் குற்றச்சாட்டும், தந்தை  எழுப்பும் ஐயமும், மகள் எடுக்கும் முடிவு மாகச் சேர்ந்து, சமூக வலைப்பின்ன லின் குடும்ப முடிச்சுக்குள் எவ்வளவு நுட்ப மாகப் பெண்ணுக்கு எதிரான வன்முறை தொடுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று  உணர்த்துகின்றன. கனவில் கூட துரத்து கிற கவலையை அவர் பகிர்கிறபோது, இத்தகைய நிலையில்  வாழும் பெண்  களின் சொந்தக் கனவுகள் கலைக்கப் பட்டுவிடும் அவலம் பதிவாகிறது. பதின்மூன்று நிமிடக் குறும்படம் இப்படிப் பல்லாண்டுப் பிரச்சினையைப் பேசுகிறது. இணையவழி மேடை யாகிய யூடியூப் தளத்தில் கிடைக்கும் ஒளிபரப்பு வாய்ப்பை இத்தகைய சிந்த னைகளைக் கிளறும் முயற்சிக்குப் பயன்படுத்தியிருக்கிற ஷாம்நி புரொடக்சன்ஸ் குழுவினர் பாராட்டுக்குரி யவர்கள். வழக்கை எடுத்துக்கொள்ள முன்வரு கிற மகள் புதிய தலைமுறையின் பிரதிநிதி யாகிறாள். கடைசிக் காட்சியில் வழக்குரை ஞரிடம் தனது பெயர் என்னவென்று கூறு கிற அந்தப் பழைய தலைமுறைப் பெண்  மாற்றங்களுக்குத் துணிந்து தயாராகிற வர்களின் பிரதிநிதியாகிறார்.

நிறைமதி சங்கரன், ஷான் நிறை மதி, பிரியதர்ஷினி மூவரும் கதாபாத்தி ரங்களின் தன்மையை உள்வாங்கி நடித்தி ருக்கிறார்கள். அதற்கேற்ற உரை யாடல்களை எழுதுவதில் ராகவானந்தா, ஒளிப்பதிவைக் கையாண்டிருப்பதோடு திரைக்கதையை அமைப்பதில் சரண்  நாகலிங்கம் ஆகியோரும் பங்களித்தி ருக்கிறார்கள். தியாகராஜன், லிவிங்ஸ்டன் இசை, யுவராஜ் படத் தொகுப்பு ஆகியவையும் நேர்த்தியாக இணைகின்றன. ராகவானந்தா இயக்கத்தில் சுருக்கமான, ஆனால் சுரீ ரென்ற குறும்படம் நமக்குக் கிடைத்தி ருக்கிறது. வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டபடி தன் பிரச்சனைகளை ஒரு குறிப்பேட்டில் எழுத முற்படும் பெண், பின்னர் வாய்மொழியாகவே கூற முடிவு செய்வது போன்ற நயமான கலை வேலைப்பாடுகள் துணை செய்கின்றன. மணமுறிவுதான் தீர்வா என்ற குரல்கள் எழக்கூடும். எல்லோரும் மண முறிவு பெற்றுக்கொள்ளுங்கள் என்று ‘ஜானகி ரகுராமன்’ சொல்லவில்லை. இதுதான் பெண்ணுக்கு அழகு என்று தொங்கவிடப்பட்டுள்ள திரைகளுக்கு அப்பால் உள்ள அருவருப்பான வன் முறையைப் புரிந்துகொள்ளுங்கள் என்று ‘ஜானகி’ சொல்கிறார்.