முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, நவ. 12 - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 133 அடியில் வானுயர் புகழுக்குச் சாட்சியமாக திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. அதை கொண்டாடுகின்ற வித மாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. சமத்துவம் முழங்குவோம்! இந்த உலகத்துக்கே பொதுமறை வழங்கியவர் நம் அய்யன் திருவள்ளுவர். ஆனால், அந்த வள்ளுவருக்கே காவிச் சாயம் பூச இன்றைக்கு ஒரு கும்பல் நினைக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் “சமத்துவத்தை வலியுறுத்தியவர் வள்ளுவர். அவர் எல்லோருக்கும் பொது வான தமிழர்களின் அடையாளம்”- என்று மீண்டும் முழங்க வேண்டியிருக்கிறது. அதன்படி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி இரண்டு நாட்களும் தமிழக அரசு, 25 ஆண்டு நிறை வுப் பெருவிழாவை கொண்டாட இருக் கிறது. இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர் த்தும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படும். கருத்தரங்கம் - பேச்சரங்கம் டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத் தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசு கள் வழங்கப்படும். கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். உலகெங்கும் உள்ள என் அருமைத்தமிழர்கள் எங்கிருந்தாலும் வருக வருக என்று அன்புடன் அழைக் கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.