சென்னை, நவ. 12 - சத்துணவு திட்டத்தில் காலி யாக உள்ள 63 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், முழுநேர ஊழியராக்கி காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சத்துணவு ஊழியர்கள் செவ்வாயன்று (நவ.12) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். இதில், புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. மலர்விழி உரையாற்றினார். “2021ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில், பத்தி எண் 313-இல், திமுக ஆட்சி பொறுப்பேற்றால் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியத்தை வழங்கு வதாகவும், முறையான ஓய்வூதி யம் மற்றும் ஒட்டுமொத்தத் தொகை வழங்குவ தாகவும் முத லமைச்சர் வாக்குறுதி அளித் தார். அவற்றை நிறைவேற்றக் கோரி 30.6.23-இல் சென்னை சேப்பாக்கத்தில் 72 மணி நேர பட்டினிப் போராட்டம் நடத்தி னோம். போராட்டம் நடை பெறும் இடத்திற்கு வந்த, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் 15 நாட்களில் காலிப் பணியிடங் களையும், திட்டம் சார்ந்த கோரிக் கைகளையும் நிறைவேற்றுவ தாக உறுதி அளித்தனர். 2024 மார்ச் மாதம் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பா ளர்கள், முதலமைச்சரை சந்தித்து சத்துணவு ஊழியர் களின் வாழ்வாதார கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும்; குறிப்பாக, ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்; அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமும், பணிக் கொடையாக 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்றனர். நிதி நிலைமை சரியானதும் கோரி க்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சரும் உறுதி கூறினார். அந்த வகையில், அரசு ஒப்புக் கொண்ட கோரிக்கை களையாவது உடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்களான நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். முதலமைச்சர் சங்கத் தலைவர்களை அழைத்து பேசி வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார். சங்கத்தின் தலைவர் கலா மயிலாடுதுறையிலும், பொரு ளாளர் எம்.ஆர். திலகவதி காஞ்சிபுரத்திலும் கலந்து கொண்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.