சென்னை, நவ. 12 - தமிழக தலைமைத் தேர் தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாகு, தமிழக அர சுப் பணிக்கு மாற்றப்பட்டாா். இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கள் துறைச் செயலராக இருந்த அர்ச்சனா பட்நாய க்கை தலைமைத் தேர்தல் அலுவலராக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தின் முதலாவது பெண் தலைமைத் தோ்தல் அதிகாரி என்ற சிறப்புடன்- அர்ச்சனா பட்நாயக், தலை மைச் செயலகத்தில் செவ்வா யன்று பதவியேற்றுக் கொண்டார்.