சேலம், நவ.12- மார்க்சிஸ்ட் கட்சியின் சங்க கிரி தாலுகாச் செயலாளராக ஏ. ஆறுமுகம் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா 24 ஆவது மாநாடு, மகுடஞ்சாவடி பகுதி யில் தோழர் பெருமாயி நினை வரங்கங்கத்தில், தோழர் செல்லமுத்து நுழை வுவாயிலில் ஞாயிறன்று நடைபெற்றது. செங் கொடியை பானுமதி ஏற்றி வைத்தார். ஏ.சீனி வாசன் வரவேற்றார். அஞ்சலி தீர்மா னத்தை ஆர்.ராமசாமி வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி துவக்கவுரையாற்றினார். தாலுகாச் செயலா ளர் ஏ.ஆறுமுகம் அறிக்கையை முன்வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே.சேகர், மாவட்டக்குழு உறுப் பினர் பி.பாலகிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், சங்ககிரி பகுதி யில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். பட்டா இல் லாத அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். ஏழை மக்க ளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் சங்ககிரி தாலுகாச் செயலாளராக ஏ.ஆறுமுகம் மற் றும் 9 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா நிறைவுரையாற்றி னார். முடிவில், தாலுகாக்குழு உறுப்பினர் வி. மோகனா நன்றி கூறினார்.