tamilnadu

img

தீக்கதிர் கோவைப் பதிப்பு புதிய அலுவலக கட்டுமானம்!

தீக்கதிர் கோவைப் பதிப்பு புதிய அலுவலக கட்டுமானம்!

பெ. சண்முகம் அடிக்கல் நாட்டினார்

கோயம்புத்தூர், மே 14 - தீக்கதிர் கோயம்புத்தூர் பதிப்பின் புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் புதனன்று அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி, பீளமேடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதி யில் புதனன்று, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் வரவேற்றார். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என். பாண்டி, செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் அ. ராதிகா, அ. குமார், கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்டச் செயலாளர்கள் ஆர். ரகுராமன் (ஈரோடு), வி.ஏ. பாஸ்கரன் (நீலகிரி), இரா.  சிசுபாலன் (தருமபுரி), சி. மூர்த்தி (திருப்பூர்), தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், தீக்கதிர் எண்ம பதிப்பின் பொறுப்பாசிரியர் எம். கண்ணன், கோவைப்பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.  மாணிக்கம், செய்தி ஆசிரியர் அ.ர. பாபு மற்றும் தீக்கதிர் ஊழியர்கள், கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  ரூ.6.70லட்சம் நிதி அளிப்பு தீக்கதிர் கோவை பதிப்பு புதிய அலு வலக கட்டட பணிக்கு சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் ரூ.6.70லட்சம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியின் போதே மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது. அதேபோல தீக்கதிர் கோவைப் பதிப்பு ஊழியர்கள் சார்பில் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் கட்டட நிதியாக மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது. முன்னதாக, கட்சித் தலைவர் களுக்கு பறையிசை முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.