நினைவில் தடதடக்கும் “குகூ” இரயில்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பில் 27.12.2025 அன்று மாலை காந்திநகர் பகுதியிலுள்ள ஏவிபி மெட்ரிக் பள்ளியில் “குகூ” என்கிற நாடக நிகழ்வினை ஒருங்கிணைந்திருந்தது. ஒருமாதகால கூட்டுழைப்பினால் அரங்கினில் 550 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
கேரளாவிலிருந்து செயல்படும் லிட்டில் எர்த் ஸ்கூல் ஆப் டிராமா குழுவினர்களால் இந்தியா வெங்கும் பரவலாக நிகழ்த்தப்பட்டு வரும் இந்த நாட கத்தினை திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் அவர் களின் நிர்கந்தா நாடகக்குழு தயாரித்துள்ளது. தடக்…தடக்… என்கிற தாள லயத்தோடு பய ணிக்கும் ரயில், தண்டவாளத்தில் அல்லாது மனித மனங்களுக்குள் ஊடுருவிச் செல்கிறது. இந்திய வரலாற்று நிகழ்வுகளின் மீது பின்னோக்கி அழைத்துச் செல்லும் இந்த ரயில் இறுதியாக சம காலத்திற்கு திரும்பி வந்து சேர்கிறது. சாந்தினி இரயில்வே ஸ்டேசனில் கலகலப்பாக தொடங்கும் இப்பயணம் வெவ்வேறு காலவெளி களில் இரயில் பாதைகளோடு தொடர்புடைய இந்திய வரலாற்று நிகழ்வுகளை ஒருங்கிணைத்து பயணிக்கிறது. இந்திய விடுதலைக்குப் பின் நிகழ்ந்த இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் கோரங்களை மனதைப் பிழியும் நடன அசைவு களின் வழியே கண்முன்னே நிலை நிறுத்துகிறது. ஆளும் அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சி அறியாது மனித சமூகம் தவறுதலாக கைப்பற்றிக் கொண்ட மதவாத நெருப்பை உலகமெங்கும் உதறிச் செல்கி றது. அவை கோத்ரா, காசா என பெருநெருப்பின் விதைகளாய் விழுந்து, விழுந்த இடமெங்கும் பற்றி அழிக்கிறது என்பதோடு அந்த ரயில், போகும் திசை யறியாமல் நின்றுவிடுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பயணத்தின் முடிவில் பயணிகளாக பயணித்த பார்வையாளர் கள் இறுதியில் சுமக்கவியலாத பாரத்தை சுமந்து கொண்டு இறங்க வேண்டியவர்களாகிறார்கள். அப்போது ஒலிக்கும் இரயில் நிலைய அறிவிப்பு இப்புத்தாண்டு தொடங்கும் தருணத்தில் உலகம் முழுமைக்குமான செய்தியாகவும் அமைகிறது. தேசத்தின் பல்வேறு இரயில் நிறுத்தங்களில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை அந்தந்த நிலத்தின் மொழிகளில் நாடகத்தின் சம்பவங்கள் உரையாடுகின்றன. சம்பவங்களின் கனத்தை, மொழியினும் கூடுதலாக இசைக் குறிப்பு களும், கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப் பாடுகளை அரங்கில் பயன்படுத்தியிருந்த மின் விளக்குகளின் அடர் வண்ணங்களும், துலக்கமாக உணர்த்தியது. இதமான உணர்வுகளையும், கொந்தளிப்பான தரு ணங்களையும், துளியும் பிசகின்றி இவ் விரண்டு ஊடகங்களும் கடத்தியதினால் நாடக நிலத்திற்குள்ளாக கட்டுண்டு கிடந்த னர் பார்வையாளர்கள். இந்த நாடகம் முழுவதும் இரயில் பெட்டி களாக வரும் தகரப்பெட்டிகளுக்கு நிகராக நடித்துவிட வேண்டிய அவசியம் நாடகக் கலைஞர்களுக்கு அமைந்துவிடுகிறது. அப்படியிருந்தும் இறுதியில் தகரப் பெட்டி களே ரசிகர்களின் மனதில் கால்களை உந்தி யபடி இடம் பிடித்துக் கொள்கின்றன. தகரப் பெட்டிகளை பின்னுக்கிழுக்க கலைஞர்கள் தங்களை விதவிதமாக ஒப்பனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. கடைசிவரை தகரப்பெட்டி தகரப் பெட்டியாகவே இருந்து நாடகத்தின் பல காட்சிகளை மெருகேற்று கிறது. நாடகக் கலைஞர்களின் பயிற்சி மட்டு மின்றி அவர்களின் நடனத்திறன், உடல் மொழி, காட்சிகளுக்கேற்ற ஒப்பனை, மேடை யில் பயன்படுத்திய சின்னச்சின்ன உபகர ணங்கள் கூட கதையோட்டத்திற்கு பிசிறின்றி உதவியிருக்கின்றன. குறிப்பாகச் சொல்வ தென்றால் பதேர் பாஞ்சாலி திரைத் துணுக்கி லிருந்து எடுக்கப்பட்ட கரும்புத்துண்டு, சாந்தினி இரயில் நிலையத்தின் குப்பைத் தொட்டியில் விழும் டீ கப், காந்தியடிகளின் கைராட்டை, திமாப்பூர் இரயில் நிலையத்தில் பயன்பட்ட மலர் வளையம் மற்றும் கிலு கிலுப்பை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து தொடர்பறுந்து போன வாழ்நிலையைக் கொண்ட பார்வையாளர்கள் பலருக்கும் கூட நாடகத்தை மிக சரியாகவே உள்வாங்க முடிந்தது. ஆயினும் வரலாற்று சம்பவங்கள் குறித்த குறிப்பினை நாடகத்தில் தமிழ்மொழி யில் பயன்படுத்தி இருந்தால் பார்வையா ளர்களுக்கு இன்னமும் நெருக்கமானதாக இந்நாடகம் அமைந்திருக்கும் என பரவ லான கருத்து பெறப்பட்டது. இதைத்தவிர வேறு எவ்வகையிலும் குறை கூறிவிட முடி யாத அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்நாடகம் வழங்கியது. சமத்துவம் மற்றும் அமைதிக்கான இரயில் நடைமேடைக்கு வர சற்று காலதாம தமாகும், ஆனாலும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிற அறி விப்போடு நாடகம் நிறைவுற்றது. ஏன் தாம தமாகிறது? என்கிற சிந்தனையோடு வீடு திரும்பினர் பார்வையாளர்கள். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் க. சம்பத் குமார், செயலாளர் பி.ஆர்.கணேசன் மற்றும் வே.தினகரன், பாலகுமாரன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ் விற்கான பொறுப்பையெடுத்துக் கொண்ட னர். நிகழ்வில் கோவை சதாசிவம், கவிஞர் ஜான் சுந்தர், இயக்குநர் கமலக்கண்ணன் ஆகியோர் நாடகம் குறித்து சிறப்புரை யாற்றினர். இப்புத்தாண்டின் தொடக்கத்தில் தமுஎ கசவிற்கு நல்ல நம்பிக்கையையும் திருப்பூர் மக்களுக்கு நல்லதொரு கலை வடிவத்தை யும் குகூ என்கிற இந்நாடகம் வழங்கியுள்ளது.
