நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சேலம், ஜன.11- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 359 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன் வழங்கினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாள கத்தில் ஞாயிறன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில், 289 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பிலான இனைப்பு சக்கரங்கள் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 50 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ3.20 லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத் திய தையல் இயந்திரங்களும், 20 மாற்றுத்திறனாளிக ளுக்கு ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான செவித்திறன் பாதிக் கப்பட்டோர் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட் டோருக்கான செல்போன்களும் என மொத்தம் 359 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திரன் வழங் கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், துணை மேயர் மா.சாரதாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
