பெரும் விபத்து தவிர்ப்பு: மின் ஊழியர்களுக்கு பாராட்டு
உடுமலை, ஜன.11- அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைத்து, பெரும் விபத்தை தவிர்ந்த மின் ஊழியர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. உடுமலை பேருந்து நிலையம் பின்புறம் (காம்ப வுண்ட் சுவர் அருகில்) மின் கம்பி ஒன்று அறுந்து தீப் பொறி வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி சையது இப்ராஹிம், உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தார். மின்வாரிய அதி காரிகள் வரும் வரை பொதுமக்கள் விபத்து ஏற்படும் பகுதிக்கு செல்லாத வகையில் அங்கே இருந்தார். அப் பகுதிக்கு வந்த மின்வாரிய போர் மேன் அங்க முத்து தலைமையிலான ஊழியர்கள் பழுதை சரி செய்தனர். மக்கள் நெருக்கமாக வந்து செல்லும் இப்பகுதியில் யாராவது தவறுதலாக மின் கம்பியை மிதித்து இருந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கும். உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து, மின் கம்பியை சரி செய்த மின்வாரிய ஊழியர் களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மஞ்சள் சந்தைக்கு 5 நாட்கள் விடுமுறை
ஈரோடு, ஜன.11- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மஞ் சள் சந்தைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்திய மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு, பெருந் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையை முன் னிட்டு ஜன.14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மஞ்சள் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜன.17, 18 ஆம் தேதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாள்களில் மஞ்சள் ஏலம் நடை பெறாது. இதனால் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்பின் ஜன.19 ஆம் தேதி முதல் மஞ்சள் சந்தை வழக்கம்போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
இளம்பெண் கொலை: சகோதரியின் கணவர் கைது
தருமபுரி, ஜன.11- இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அப்பெண்ணின் சகோதரியின் கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஓசஹள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.அனுமந்தன் (40). கட்டிட ஒப் பந்ததாரரான இவருக்கு திருமணமாகி முனியம்மாள் (35) என்ற மனைவி உள்ளார். முனியம்மாளின் தங்கை ராஜேஸ் வரி (30), திருமணமாகி கணவர் பிரபு-வுடன் அதேபகுதியில் குடியிருந்து வந்தார். பிரபு கட்டடத் தொழிலாளி என்பதால், அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூா் சென்றுவிடுவாராம். இதனால் ராஜேஸ்வரிக்கும், அனுமந்தனுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்துள்ளது. இந்நிலையில், அனு மந்தனுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே சனியன்று வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ராஜேஸ்வரியை தாக்கிய அனுமந்தன், தளவாய்ஹள்ளி போயர் தெரு பகுதி நிலத்திலுள்ள பள்ளத்தில் தள்ளினார். மேலும், அருகிலிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டதில், பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி நிகழ்விடத்திலேயே உயி ரிழந்தார். இதன்பின் டிராக்டர் மூலம் மண்ணைக் கொட்டி அந்தப் பள்ளத்தை அனுமந்தன் மூடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த இண் டூர் காவல் துறையினர், அனுமந்தனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரியை தாக்கி கொலை செய்ததாகவும் அனுமந்தன் ஒப்புக்கொண் டார். இதையடுத்து, அனுமந்தனை கைதுசெய்த போலீசார், ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இண்டூா் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.