tamilnadu

img

ரத்ததான சேவையில் முத்திரை பதிக்கும் வாலிபர் சங்கம்!

ரத்ததான சேவையில் முத்திரை பதிக்கும் வாலிபர் சங்கம்!

கோவை, ஜன.11- கோவை மாவட்டத்தில் தொடர்ந்து ரத்ததான முகாம்களை நடத்தி, ஏழை எளிய மக்களின் உயிர்காக்க உதவும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்திற்கு கோவை அரசு மருத்துவமனை நிர் வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி  கௌரவித்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கோவை மாவட்டம் முழு வதும் உள்ள இளைஞர்களை ஒருங் கிணைத்து, தொடர்ச்சியாக பல் வேறு ரத்ததான முகாம்களை முன் னெடுத்து வருகிறது. இதில் சேகரிக் கப்படும் ரத்தமானது, எந்தவித  கட்டணமுமின்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங் கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை களுக்காக வரும் ஏழை மக்களுக்கு  இந்தச் சேவை பெரும் உதவியாக இருந்து வருகிறது. வாலிபர் சங்கத் தின் இந்த இடைவிடாத மக்கள் சேவையைப் பாராட்டும் விதமாக, கோவை அரசு மருத்துவமனை முதல்வர், வாலிபர் சங்கத்திற்கு வெள்ளியன்று பாராட்டுச் சான்றி தழை வழங்கினார். இந்நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராஜா மற்றும் செயலாளர் தினேஷ் ராஜா ஆகி யோர் கலந்துகொண்டு சான்றி தழை பெற்றுக் கொண்டனர். மாவட்டம் முழுவதும் இரவு பகல் பாராது இரத்ததான முகாம் களை ஒருங்கிணைத்த வாலிபர் சங்கத் தோழர்களுக்கும், கிளை  மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர் களுக்கும் சங்கத்தின் மாவட்டக் குழு வாழ்த்துக்களையும் பாராட்டு களையும் தெரிவித்துக் கொண்டது.  “மனிதநேயத்துடன் இளைஞர் களை நற்பணியில் ஈடுபடுத்துவ தில் வாலிபர் சங்கம் எப்போதும் முன்னணியில் இருக்கும்” என இந் நிகழ்வின் போது நிர்வாகிகள் தெரி வித்தனர்.