மார்க்சிஸ்ட் கட்சி, ததீஒமு தொடர் போராட்டம் வெற்றி பட்டியலின மக்களுக்கு நிலத்தை அளக்கும் பணி துவக்கம்!
கோவை, ஜன.11- இருகூர் பகுதியில் பட்டியல் சமூக மக்களின் நிலத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடத்திய தொடர் போராட் டத்தின் விளைவாக, சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க பொக் லைன் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது துவங்கப்பட் டுள்ளது. கோவை மாவட்டம், இருகூர் தாலுகாவில் 30 ஆண்டுக்கு மேலாக வசிக்கின்ற பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கியும், குறிப்பிட்ட இடத்தை அளந்து கொடுக்க வில்லை. இதனைக் கண்டித்து செப்.30 ஆம் தேதி தோழர் சீனிவாச ராவ் நினைவு தினத்தன்று, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இணைந்து போராட்டத்தை நடத்தியது. அதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்து இடத்தை அளந்து தருவதாக எழுதிக் கொடுத்து உறுதியளித்தனர். ஆனால், உறுதியளித்தபடி குறிப் பிட்ட நாளில் இடத்தை அளந்து கொடுக்கவில்லை. இதனைய டுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடப்பட்டது. இந்நிலையில், இருகூர் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் அதி காரி உள்ளிட்டோர் பயனாளிகள் அனைவருக்கும் இடத்தை அளந்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் ஒப்பு தல் அளித்துள்ளதாக கூறி சனி யன்று சம்பந்தப்பட்ட இடத்தை பொக்லின் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கினர். தொடர்ந்து, திங்களன்று (இன்று) மேற்கண்ட இடத்தினை அளந்து கொடுப்பதாக வாக்குறுதி அளித் துள்ளனர். பட்டியல் சமூக மக்களின் நீண்ட கால கோரிக்கை வெற்றி பெற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எடுத்த முயற்சிக்கு சம்பந்தப்பட்ட பயனாளிகளும் பொதுமக்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டா லின்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் மகேஸ்வரன், செயலாளர் நாக ராஜ், பொருளாளர் சுப்பிரமணி, சிஐ டியு நிர்வாகி விஜயராகவன், வாலி பர் சங்க தாலுகா செயலாளர் குரு சாமி, கிளைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
