விபத்துகள் ஏற்படுத்தி வந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்! அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நடவடிக்கை!
தருமபுரி, ஜன.11- இண்டூர் அருகே விபத்துகள் ஏற்ப டுத்தி வந்த ஜல்லி பெயர்ந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலையை சீரமைத்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், இண்டூர் அருகே பண்டஹள்ளி முதல் காளேகவுண்ட னுார் வரையிலான 4.6 கி.மீ. சாலை, மிகவும் சேதமடைந்து காணப்பட் டது. பொதுமக்களின் தொடர் கோரிக் கையால் கடந்த 2021 ஆம் ஆண்டு பிர தம மந்திரி கிராம சாலைகள் திட்டத் தின்கீழ் ரூ.1.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்தது. சாலைப்பணி நடக்கும்போது, அப் பணி தரமற்ற முறையில் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இச்சாலையை, 2021 முதல், 2026 வரை பராமரிப்பு பணிக்காக, மேற்குறிப்பிட்ட நிதியி லிருந்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் ஒதுக் கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சாலையை முறையாக பராமரிக்காத தாலும், தரமற்ற முறையில் சாலை பணி மேற்கொண்டதாலும், சாலை அமைத்து 2 ஆண்டுகளிலேயே தார்ச் சாலை சேதமடைந்து, ஜல்லிக்கற் கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இச்சாலை, அதிக வளைவுகளை கொண்டுள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டாக வலியு றுத்தியும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், எர்ரபையன ஹள்ளி ஊராட்சி, தாசன்கொட்டாயை சேர்ந்த மக்கள், விபத்து ஏற்படுவதை தடுக்க, சாலையில் பெயர்ந்திருந்த ஜல்லியை அவர்களாகவே அப்புறப் படுத்தினர். இனியாவது, மாவட்ட நிர் வாகம் இதுபோன்ற தரமற்ற முறை யில் சாலை அமைப்பதை தடுக்க, பராமரிப்புப்பணி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கிராம சாலையில் நடக்கும் விபத்து களை தடுக்க, சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
