tamilnadu

img

தி வயர் இணைய இதழ் முடக்கம்!

தி வயர் இணைய இதழ் முடக்கம்!

மே 9 வெள்ளிக்கிழமையன்று தி வயர்  இணைய இதழை பாஜக அரசு முடக்கியுள்ளது.  இந்தியாவில் தி வயர் இணையதளத்தை பயனர்கள் அணுகுவதை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய சேவை வழங்குநர்கள்  ‘ஐடி சட்டம்,  2000 இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின்படி தி வயர் முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள பத்திரிகை சுதந்திரத்திற்கான உரிமையை அப்பட்டமாக மீதும் நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்ற னர்.  மூன்றாவது தாக்குதல் தி வயர் இணையதளத்தின் மீதான தாக்குதல் கடந்த சில மாதங்களில் ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலாகும். கடந்த பிப்ரவரி மாதம் இந்திய குடிமக்களை அமெரிக்கா நாடு கடத்தியது. குறிப்பாக பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்த போதே இந்தி யர்களை நாடுகடத்தியது.  இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனை மையப்படுத்தி அவரை நையாண்டி செய்யும் வகையில் விகடன் ஒரு கார்ட்டூனை வெளியிட் டது. அதையடுத்து அவ்விதழை மோடி அரசாங்கம் முடக்கியது.  தி வயர் இதழை முடக்குவதற்கு முன்தினம் மக்தூப் என்ற இதழையும் ஒன்றிய அரசு இந்தி யாவில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது தி வயர் இணைய இதழ் இந்த முடக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.  கடந்த ஆண்டு உலக நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 159 நாடுகளில் இந்தியா மிக மோசமான இடத்தில் 151 ஆவது இடத்தில் இருந்தது. 

8000 கணக்குகளை  முடக்க உத்தரவு

 மே 8 அன்று இந்தியாவில் செயல்படும் சுமார் 8000 டுவிட்டர் எக்ஸ் கணக்குகளை முடக்க வேண்டும் என ஒன்றிய அரசு அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த பட்டியலில் பன்னாட்டு செய்தி நிறுவனங்களும் தனிப்பட்ட சில பயனர்களின் கணக்குகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.