சிவப்பு நதியென பாயும் மக்களின் போராட்ட அலை
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்றப்படாத விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைமையில் ஜனவரி 25 அன்று 40,000 க்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் நாசிக்கில் துவங்கிய மாபெரும் நடைபயணம் 2 நாட்களில் சுமார் 60 கி.மீ தூரத்தைக் கடந்து, செவ்வாய்க்கிழமை அன்று காலை கசாரா மலைப்பாதையில் நுழைந்தது. நாசிக்-மும்பை நெடுஞ்சாலையில் சிவப்பு நதியென செங்கொடிகளுடன் மக்களின் பேரணி கசாரா கணவாயை கடந்த டிரோன் காட்சி. (செய்தி : 2)
