உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயமே!
“எங்களைத் தூக்கிலிடுவதன் மூலம் தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தால்.. லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டோரும், துன்பங்களில் உழல்வோரும் விடுதலைக்காக எதிர்பார்த்திருக்கும் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நினைத்தால்.. இதுதான் உங்கள் எண்ணம் என்றால், எங்களைத் தூக்கிலிடுங்கள்! இங்கு நீங்கள் ஒரு சிறு தீப்பொறியின் மீது கால் வைக்கிறீர்கள்.. ஆனால் இங்கே..அங்கே..உங்களுக்குப் பின்னால்..முன்னால்..எங்கும் தீப்பந்தங்கள் ஒளிரும்! இது நீறுபூத்த நெருப்பு..உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களுக்கு எதிரான அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும்! உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயமே.” தூக்குமேடையில் மேதினத் தியாகிகள் முழக்கமிது. பெரணமல்லூர் சேகரன்
