தொழிலாளர் வர்க்கத்தின் தியாக போராட்ட வரலாற்றை நினைவு கூறும் வால்பாறை தியாகிகள் நினைவு ஜோதிப்பயணம் துவங்கியது!
கோவை, அக்.26- வால்பாறை மலைப்பகுதி யில் தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள் தங்கள் உழைப்புக்கான உரிமைக்காகப் போராடி துப்பாக் கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகங்க ளின் நினைவாக, “வால்பாறை தியாகிகள் நினைவு ஜோதிப் பய ணம்”, கோவையில் நடைபெற வுள்ள சிஐடியு மாநில மாநாட்டிற் காக ஞாயிறன்று எழுச்சியுடன் புறப் பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர் வரலாற்றில் 1957 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ஒரு கறுப்பு நாளாகப் பதிவாகியுள்ளது. மிகக் குறைவான கூலியுடன் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வந்த ஆயிரக் கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், கூலி உயர்வு மற் றும் அடிப்படை வசதிகளை வலியு றுத்தி 1957 மே மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங் கினர். நிர்வாகத்தின் அடக்குமுறை களுக்கு மத்தியில் அமைதியாகப் பேரணி சென்ற தொழிலாளர்கள் மீது, நிர்வாக ஆதரவு கும்பலால் திட்டமிட்டு மோதல்கள் தூண்டப் பட்டன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அன்றைய தினம் தொழிலாளர்கள் மீது வரவழைக்கப்பட்ட காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஐந்து அப்பாவித் தொழிலா ளர்கள் சம்பவ இடத்திலேயே பலி யாகினர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரமான வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இந்தச் சம்பவம், அன்றைய தமிழக அரசியல் களத் தில் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியது. இந்த ஐந்து தியாகிக ளும், வால்பாறைத் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் போராட்டத் தின் அழியாச் சின்னங்களாக, செங் கொடி இயக்கத்தால் ஆண்டுதோ றும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த துயரச் சம்பவத்தின் 68 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, இந்தத் தொழிலாளர்க ளின் உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில், வரும் நவம்பர் 6 முதல் 9 வரை கோவையில் நடை பெற உள்ள சிஐடியு மாநில மாநாட் டிற்குரிய ஜோதிகளில் ஒன்றாக, ‘வால்பாறை தியாகிகள் நினைவு ஜோதி’ புறப்பட்டுள்ளது. குறிப் பாக, எந்த காவல் நிலையம் முன்பு தோட்டத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனரோ அதே இடத்தில் இருந்தே இந்த உணர்ச்சி மயமான ஜோதிப் பயணம் எழுச்சி யுடன் துவங்கியது. இந்த நிகழ்வு, தொழிலாளர்களின் தியாகத்திற் கான முதல் மரியாதையாகவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரத் தைப் பெற்றுத்தரும் பயணமாக வும் கருதப்படுகிறது. இந்நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆனைமலை தாலுகா குழு உறுப்பினர் பி.பரம சிவம் தலைமையேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி துவக்கி வைத்து எழுச்சி யுரையாற்றினார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி ஜோதியை எடுத்துக் கொடுக்க, அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில துணை பொதுச்செயலாளர் எம். கனகராஜ் பெற்றுக்கொண்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், ஆனை மலை தாலுகா செயலாளர் வி.எஸ். பரமசிவம், சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் வேளாங்கண்ணிராஜ், மாவட் டத் தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்டப் பொருளாளர் மகேஷ் குமார், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மண்டலச் செயலாளர் ஆர். சரவணன், மின் ஊழியர் மத் திய அமைப்பு மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் துரை சாமி, மாவட்டப் பொருளாளர் கே. மகாலிங்கம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஜூல்ஃபீகர் மற்றும் சிஐடியு, தமிழ் நாடு விவசாய சங்கம், விதொச, மாணவர் சங்க நிர்வாகிகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டு, செங் கொடி இயக்கத்தின் இந்த வர லாற்றுப் பயணத்திற்கு சாட்சியம ளித்தனர். இந்த நினைவு ஜோதிப் பயணம், தொழிலாளர் உரிமைக ளுக்கான நீடித்த போராட்டத்தின் ஒரு அடையாளமாக, கோவை மாவட்டத்தில் 8 நாட்கள் பிரச்சாரத் தில் ஈடுபட்டு, மாநில மாநாட்டு திடலை வந்தடையவுள்ளது.
