tamilnadu

img

அழியும் பறவையினத்தை காப்பாற்றிய சிறிய குளவி - சிதம்பரம் ரவிச்சந்திரன்

மிகச் சிறிய ஒட்டுண்ணி குளவி உலகின் மிக அரிய பறவையினங்களில் ஒன்றை அழிவில் இருந்து காப்பாற்றியுள்ளது. குளவிகள் பறவையினத்தின் வாழ்விற்கு அச்சுறுத்தலாக இருந்த ஆக்ரமிப்பு பூச்சிகளை கொன்று அபூர்வ பறவையினத்திற்கு புது வாழ்வளித்துள்ளது. ஆக்கிரமிப்பு பூச்சிகளால் அழிந்த மரங்களும் பறவைகளும் தென்னாப்பிரிக்கா டிரிஸ்ட்டன் டா  கன்ஹா (Tristan da Cunha) என்ற உல கின் மிகத் தொலைதூர தீவுக்கூட்டத் தில் அமைந்துள்ள நைட்டிங்கேல் (Nightingale) தீவில் வாழும் வில்கின்ஸ்  பண்டிங் (Wilkins’ bunting) என்ற பற வையினத்தை மைக்ரோடெரிஸ் நயட்னரி  (Microterys nietneri) என்ற மிகச் சிறிய  குளவியினம் காப்பாற்றியுள்ளது. தீவில்  உள்ள பைலிகா அர்போரீய (Phylica arborea) என்ற ஒரே ஒரு உள்ளூர் இன  மரத்தின் பழங்களை மட்டுமே இப்பறவை கள் உண்டு வாழ்கின்றன. ஆனால் 2011 இல் அழையா விருந்தா ளியாக ஒரு உயிரினம் தீவிற்குள் நுழை வதை விஞ்ஞானிகள் கவனித்தனர். அது  ஒரு ஆக்ரமிப்பு உயிரினம். அது ஒரு  சாறு உறிஞ்சும் பூச்சியினம். தற்செயலாக  அது மனிதர்களால் அந்த தீவிற்கு அறி முகப்படுத்தப்பட்டது என்று கருதப்படு கிறது. இந்த பூச்சிகள் தேன் துளிகளை  சுரக்கின்றன. இவை பைலிகா அர்போரிய மரங்களை பலவீனப்படுத்தி அழிக்கின் றன. இவற்றின் வரவு காடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது வில்கின்ஸ் பறவைகளை அழி யும் நிலைக்கு கொண்டு சென்றது. 2019  ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த கணக்கெ டுப்பில் இனப்பெருக்கத்திற்கு தகுதி யான 120 வில்கின்ஸ் ஜோடிகள் மட்டுமே  இந்த தீவில் வாழ்ந்தன. இது இந்த சின்னஞ்சிறிய மஞ்சள் நிறப் பறவையை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடு பட்டிருந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. 2019 இல் வீசிய பெரிய புயல் தீவில்  இருந்த காடுகளை பெருமளவில் அழித்  தது. இப்பறவைகளை அழிவில் இருந்து  காக்க ராயல் பறவைகள் பாதுகாப்பு சங்கம் (RSPB), பன்னாட்டு வேளாண்மை  மற்றும் உயிரி அறிவியல் மையம் (CABI),  உணவு மற்றும் சூழல்ஆய்வு முகமை மற்றும் டிரிஸ்ட்டன் அரசு இணைந்து அசாதாரணமான ஒரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தின. இதன்படி பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்கும் மைக்ரோடெரிஸ் குளவிகளை தீவிற்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. வருங்காலத்தில் இங்கு வாழும் வில்கின்ஸ் பறவை களுக்கு உணவாக பயன்படும் மரவகை யை அதிக அளவில் வளர்க்க உதவும்  நர்சரிகள் தொடங்கப்பட்டன. இது தீவின்  உயிரியல் பாதுகாப்பை மேம்படுத்தும். இதற்கு முதலில் குளவிகள் லண்டனில் இருந்து தரை, கடல் மற்றும் வான் வழி யாக ஒரு மாதகாலம் பயணம் செய்ய வேண்டும்.

பறவைகளை காப்பாற்றிய குளவிகள்

“குளவிகள் நீண்டதொரு காவியப் பயணத்தை மேற்கொண்டன. முதலில் குளிரூட்டப்பட்ட பைகளில் லண்டனில் இருந்து கேப் டவுனுக்கு குளவிகள் ஒரு விமானத்தில் பயணம் செய்தன. பிறகு அவை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஊழியரின் ஹோட்டல் அறை யில் தங்கவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து டிரிஸ்ட்டனுக்கு ஒரு வார காலம் நீண்ட படகுப் பயணத்தை அவை  மேற்கொண்டன. சில சமயங்களில் அப்போது வெப்பநிலை சுழிநிலைக்கும் கீழ் சென்றது. கடைசியாக அவை நைட்டிங்கேல் தீவிற்கு ஒரு படகுப் பயணத்தை மேற்  கொண்டன. இது காலத்தை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு போராட்டமாக இருந்தது. பல குளவிகள் இந்த பய ணத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டன. தீவிற்கு கொண்டு செல்லப்பட்டவற்றில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான குளவிகளே உயிர் பிழைத்தன” என்று பன்னாட்டு வேளாண்மை மற்றும் உயிர் அறிவியல் மையத்தின் பூச்சியியல் நிபுணர் டாக்டர் நாபாட் மாக்சி (Dr Norbert Maczey) கூறுகிறார். ஏப்ரல் 2021 இல் குளவிகளின் முதல்  தொகுப்பு தீவிற்கு சென்றன. அடுத்த டுத்த ஆண்டுகளில் மேலும் கூடுதல்  குளவிகள் அங்கு கொண்டுவிடப் பட்டன. மெதுவாக குளவிகள் தாமே  தம் எண்ணிக்கையை அதிகரித்துக்  கொண்டன. இவை அழிந்துகொண்டி ருந்த பறவையினத்தை காப்பாற்றின என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2024 இல் நடந்த கணக்கெடுப்பில் தீவின் 80% காடுகள் அழிந்துவிட்டது கண்டறியப்பட்டது. இப்போது அங்கு 60 முதல் 80 ஜோடி வில்கின்ஸ் பறவை கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை  குறைந்திருந்தாலும் குறுகிய காலத் திற்குள் காடுகள் தம்மைத்தாமே அழிவில் இருந்து மீட்டுக்கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குளவிகள் தீவிற்கு வந்து சேர்ந்ததால் வரும் ஒரு சில ஆண்டுகளில் பறவைகளின் எண்  ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. “உறுதியான செயல்பாடு, சூழல் நிபு ணத்துவம் மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் அழியும் நிலையில் உள்ள ஒரு பறவையினத்தின் தலைவிதியை நம்மால் மாற்றமுடியும் என்பதை இந்த  திட்டம் எடுத்துக்காட்டுகிறது” என்று ராயல் பறவைகள் பாதுகாப்பு சங்கத்தின்  யு கே கடல் கடந்த எல்லைப் பகுதிகளுக்  கான திட்ட மேலாளர் டேவிட் கின்சின் ஸ்மித் (David Kinchin-Smith) கூறு கிறார். இந்த பறவைகளுக்கு குளவிகளும் விஞ்ஞானிகளும் இணைந்து புதுவாழ்வ ளித்துள்ளனர். உலகின் ஒரு மூலையில், தொலைதூரத்தில், எங்கோ ஒரு தீவில் உள்ள இப்பறவைகள் முன்பு போல மகிழ்வுடன் வாழும் காலம் விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது.