tamilnadu

img

தமிழக அரசை ஒன்றிய பாஜக அரசு முடக்குகிறது

 சென்னை,ஜன.11- தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.பல திட்டங் களை முடக்குகிறது என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் கடு மையாக குற்றம் சாட்டினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பல்வேறு திட்டங்க ளையும் மிக, மிக நெருக்கடியான சூழலில் தான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.  2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு கால பாதாளத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்திருக்கிறோம். இன்னொரு பக்கம், ஒன்றிய அரசானது தமிழ்நாடு அரசை தொ டர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களுக்கு, மாநில அரசினு டைய கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து, அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குவது மட்டுமில்லாமல், அந்தத் திட்டங் களை முடக்குகிற சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. பெஞ்சால் புயல் பாதிப்புக்கு  6 ஆயிரத்து 675 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பீடுகள் செய்யப்பட்டு, நிதி விடுவிப்புக் கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், இதுவரை எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. கடந்த நிதியாண்டில், மிக்ஜாம் புயல் தாக்கியது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிக கன மழை ஏற்பட்டது. இந்த இரண்டு பேரிடர்கள் தாக்கிய பிறகும், மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை, அதுவும் நான்கு மாத தாமதத்திற்கு பிறகு, ஒன்றிய அரசு அனுமதித்தது. இது, மாநில அரசு கோரிய 37 ஆயிரத்து 906 கோடி ரூபாயில் ஒரு விழுக்காடு கூட இல்லை. ஒன்றிய அரசின்  திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 4 ஆயிரத்து 142 கோடி ரூபாயில், 732 கோடி ரூபாய் மட்டும்தான் வழங்கியிருக்கிறார்கள். நிதியின்மையினால் திட்டங்க ளின் செயல்பாடு சுணங்கக் கூடாது என்பதற்காக நாம்தான் நம்முடைய நிதியை கொடுத்து, இந்தத் திட்டத்தைச் செயல் படுத்திக்கொண்டு வருகிறோம். தனியார் நிறுவனங்கள் மூலம் மாநிலமும் வளர்கிறது; கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மூலம் லட்சக் கணக்கான குடும்பங்களும் வளர்கி றது, வாழ்கிறது. தமிழ்நாட்டில், 39 ஆயிரத்து 699 சிறு, குறு தொழில் கள் இருக்கின்றன. இதன்மூலம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 807 தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.