tamilnadu

img

தமிழகத்திற்கு மோடி அரசு மேலும் மேலும் துரோகம்!

தமிழகத்திற்கு மோடி அரசு மேலும் மேலும் துரோகம்!

நிதி ஒதுக்கீட்டில் இருந்த 4 ரயில்வே திட்டங்கள் சர்வே பட்டியலில் சேர்ப்பு

சு. வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு; கண்டனம்!

மதுரை, மே 14 - ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள். பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள் இப்பொழுது திட்ட விபரங்களையும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்; குறிப்பாக, தமிழகத்திற்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் இருந்த 4 திட்டங்களை மீண்டும் சர்வே பட்டியலுக்கே மாற்றியுள்ளனர் என்று, ஒன்றிய பாஜக அரசை சு. வெங்கடேசன் எம்.பி.  சாடியுள்ளார். பாஜக அரசின், இந்த மக்கள் விரோத செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மேலும் கூறியிருப்பதாவது:

முதலில் பட்ஜெட்,  அடுத்து பிங்க் புத்தகம் பாஜக ஆட்சிக்கு வந்த பின் ரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக் கட்டினார்கள். ரயில்வே திட்ட விபரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை சென்ற  ஆண்டு பொதுபட்ஜெட் முடியும் வரை வெளியிட வில்லை. இதனை நாடாளுமன்றத்தில் நான் உட்பட பல உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி விமர்சித்தோம். தொடர்ந்து நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது. பட்ஜெட் முடிந்தபின் தான் பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டது.  இந்த ஆண்டு பட்ஜெட் முடிந்த பின்னும் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பிங்க் புத்தகம் வெளியிடப்படப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒவ்வொரு ரயில்வேக்கும் தொகுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது.

ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் மறைப்பு

பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் வெளியானது. கடைசியாக  செவ்வாயன்று (மே 13) தான், தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப்பட்டியல் ஒவ்வொரு ரயில்வேக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பார்த்தால், அதில் முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்துக்கும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பிங்க் புத்தகத்தில் இருந்த விவரங்களான திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு போன்ற விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இல்லை. திட்ட மதிப்பீடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது 2025-26 நிதியாண்டிற்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை.  இதனால் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வ ளவு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளனர்.  தெற்கு ரயில்வேக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு? ஏற்கெனவே பல ரயில்வே திட்டங்களுக்கு, குறிப்பாக புதிய பாதை மற்றும் இரட்டைப் பாதை திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி யிருப்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டி இருந் தேன். எவ்வளவு ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்கிற விவரம் வந்தால் தான், ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களா அல்லது கூடுதலாக ஒதுக்கி இருக்கிறார்களா என்கிற விவரம் நமக்குத் தெரிய வரும். அது குறித்து விமர்சனங்களையும் முன்வைக்க முடியும். ஆனால், அந்த விவரங்கள் வழங்கப்படாமல் வெறும் திட்ட மதிப்பு மட்டும் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்ல தெற்கு ரயில்வேக்கு இந்த ஆண்டில் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு என்ற ஒரு சுருக்க அறிக்கை ‘பிங்க்’ புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த  விவரம் இப்பொழுது முழுமையாக மறுக்கப் பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் மொத்த திட்ட  செலவுகள் ஒவ்வொரு திட்டத்துக்கும் தரப்பட்டுள் ளது. ஆனால் தெற்கு ரயில்வேக்கு அல்லது ஒவ் வொரு ரயில்வேக்கும் தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்கிற விவரம் மறைக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் சர்வே-க்கு அனுப்பப்பட்ட திட்டங்கள்

அதுமட்டுமல்ல ஏற்கெனவே சர்வே முடிந்து  பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட ஆவடி - திருப்பெரும் புதூர் இருங்காட்டு கோட்டை புதிய பாதை திட்டம்  பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டு சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  அதேபோல ஏற்கெனவே சர்வே முடித்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இரட்டைப் பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் சர்வே பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன. காட்பாடி - விழுப்புரம்; ஈரோடு - கரூர்  - சேலம்; கரூர் - திண்டுக்கல் ஆகிய மூன்று திட்டங் களுக்கு முறையே ரூ. 2 கோடி - ரூ. 81 லட்சம் - ரூ. 2 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.  தமிழக மக்களை ஏமாற்ற முயற்சி இதைப் போல மற்ற புதிய பாதை திட்டங் களான அத்திப்பட்டு - புத்தூர்; திண்டிவனம் - செஞ்சி  - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; ஈரோடு - பழனி; மொரப்பூர் - தர்மபுரி ஆகிய திட்டங் களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிற விவரம் இல்லாததால் நம்மால் அதன் உண்மை  நிலையை அறிய முடியாத வகையில் மறைத்திருக் கிறார்கள்.  தமிழகத்தைப் பொறுத்தவரை அகல பாதைத் திட்டம், இரட்டைப் பாதைத் திட்டம், புதிய  பாதை திட்டம் ஆகியவற்றுக்கு இந்த தொகுக்கப் பட்ட பட்ஜெட் விவரப்பட்டியலிலும் எவ்வளவு ஒதுக்கப் பட்டுள்ளது என்கிற விவரம் இல்லாமல் தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியா முழுவது முள்ள மொத்த ரயில்வேகளுக்கும் இதே நிலை தான். யாருக்கும் திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டு ஒதுக்கீடு என்பதான விவ ரங்கள் கொடுக்கப்படவில்லை. இந்த விவரங்கள் இருந்தால் அரசின் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிராக  விமர்சனங்கள் எழும் என்பதை தவிர்ப்ப தற்காகவே பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள். இப்போது தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப் பட்டியலிலும் விவரங்களை மறைத்துள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

புள்ளிவிவரங்களை மறைப்பது உச்சபட்ச அநீதி

வெளிப்படையான நிர்வாகம் என்பது ஜனநாய கத்தின் அடிப்படை. புள்ளிவிபரங்களை மறைப்பது என்பது குற்றம் மட்டுமல்ல, குற்றத்தை மறைக்கும் உச்சபட்ச அநீதி. பாஜக அரசு தங்களது அரசியல் காரணங்களுக்காக செய்யும் பாரபட்சமான அணுகுமுறையால் தொடர்ந்து அம்பலப்பட்டு வரு கிறது. அதிலிருந்து தப்பிக்க, மக்களைத் தகவல்கள் அற்ற கையறு நிலையில் நிறுத்துகிறது. ரயில்வே துறையில் திட்டங்களுக்கான உண்மையான ஒதுக்கீட்டு விபரங்களை வெளியிடாமல் மக்க ளையும் நாட்டையும் அறியாமைக்குள் தள்ளும் ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சு. வெங்க டேசன் எம்.பி. தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.