tamilnadu

img

ஐ.டி ஊழியர்களின் பணிச்சுமை குறித்த தரவுகள் எதுவும் ஒன்றிய மோடி அரசிடம் இல்லையாம்!

ஐ.டி ஊழியர்களின் பணிச்சுமை குறித்த தரவுகள் எதுவும் ஒன்றிய மோடி அரசிடம் இல்லையாம்!

நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, டிச. 1 - நாடு தழுவிய அளவில் தகவல்  தொழில்நுட்ப ஊழியர்கள் எதிர் கொள்ளும் பணிச்சுமை, மன அழுத்தம் குறித்த எந்தவொரு ஆய்வும் ஒன்றிய அரசால் நடத்தப் படவில்லை என்பதும், அதுதொ டர்பான தரவுகளே ஒன்றிய அர சிடம் இல்லை என்பதும் அம்பல மாகியிருக்கிறது. சு. வெங்கடேசன் எம்.பி.  மக்களவையில் கேள்வி “தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணிச் சுமை, மன அழுத்தம், உடல் நலம் தொடர்பான தொழில்சார் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்து,  அரசாங்கம் தரவுகளைக் கொண்டு உள்ளதா? விரிவான ஆய்வு ஏதும்  மேற்கொண்டதா? இல்லையெ னில் சுகாதார நிபுணர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழி லாளர் நல அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பரிந்துரைகளை பெறுமா?” என்ற கேள்வியை (எண் 38/1.12.2025) நாடாளுமன்றத்தில் சு. வெங்க டேசன் எம்.பி. எழுப்பியிருந்தார். மாநில அரசு தான் பதிலளிக்க வேண்டுமாம் அதற்கு தொழிலாளர் மற்றும்  வேலைவாய்ப்புத்துறை இணைய மைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்த லாஜே, பதிலளித்துள்ளார். அதில், “தொழிலாளர் நலன் குறித்த அதிகாரம் ஒத்திசைவு பட்டியலில் வருவதால் ஒன்றிய அரசு  மற்றும் மாநில அரசுகள் இரண்டின்  வரம்பிற்குள்ளும் வந்து விடு கிறது; ஒன்றிய அரசின் தொழில் உறவுகள் ஒன்றிய தொழில் துறை உறவுகளுக்கான அதிகாரிகள் வாயிலாகவும், மாநில அளவிலான தொழில் உறவுகள், மாநில தொழிலாளர் துறையாலும் உறுதி செய்யப்படுகின்றன; பெரும் பாலும் தகவல் தொழில் நுட்பம்  சார்ந்த சேவைகள் ‘கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்’  கீழே வருவதால் அதற்குப் பதி லளிப்பதற்குப் பொருத்தமானது, மாநில அரசே ஆகும்; ஒன்றிய அரசு  தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020-ஐ இயற்றியுள்ளது; இது  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரி யும் தொழிலாளர்களின் உடல்  நலம், பாதுகாப்பு, நல்வாழ்வை  உறுதி செய்கிற நோக்கம் கொண் டது” என்று பதிலளித்துள்ளார்.  பிரச்சனையிலிருந்து கைகழுவும் மோடி அரசு இதனைச் சுட்டிக்காட்டி, தமது  சமூகவலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை சு. வெங்க டேசன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.  அதில், ஒன்றிய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சரின் பதில் வினோதமாக இருக்கிறது, என்றும்; ஆய்வுகள் நடத்துவது தனது வேலை அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச் சகம் பிரச்சனையிலிருந்து கை கழுவுவது கண்டனத்திற்கு உரி யது, என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மாநில அரசின் வரம்பு  இப்போது தான் தெரிகிறதா? அவர் மேலும் கூறியிருப்ப தாவது: “ஒன்றிய தொழிலாளர் நலத் துறை அமைச்சரின் பதில் வினோத மாக இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும் போது  இவர்களுக்கு கூட்டாட்சி பற்றியோ, மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு செவி மடுக்க  வேண்டும் என்றோ அக்கறை இல்லை. மாறாக, இவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்விகள்  எதையும் எழுப்பினால் மட்டும் ஒத்தி சைவுப் பட்டியல், மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்று பதில்  சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ஐ.டி. ஊழியர்கள் தற்கொலை 27 சதவிகிதம் அதிகரிப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும்  தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறைகளில் பணியாற்றும் தொழி லாளர்கள் கடும் பணிச் சுமைக்கும், உளவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2018-22க்கு இடைப்பட்ட காலத்தில் 27  சதவிகிதத் தற்கொலைகள் சமூகத் தில் அதிகரித்துள்ளன; சாமானி யர்கள் மத்தியில் மட்டுமின்றி உயர்கல்வி பயின்ற தொழில்நுட்ப பணியாளர்கள் மத்தியிலும் தற்கொலைகள் நிகழ்கின்றன; இத்தகைய சூழலில் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் அது  சார்ந்த சேவைகளில் தொழிலா ளர் பணி நிலைமைகள் பற்றிய ஆய்வுகளும் தரவுகளும் தேவை  என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இவ்வாறிருக்கையில், ஆய்வுகள் நடத்துவது தனது வேலையே அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சகம் கை  கழுவுவது கண்டனத்திற்கு உரியது.  ஒன்றிய அரசின் பதிலிலேயே முரண்பாடு ஆனால் இந்த பதிலிலேயே, ‘ஒன்றிய அரசின் தொழில்சார் பாது காப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்- 2020 இந்த  தொழிலாளர்களுக்கும் பொருந்தும், அவர்களின் நலனை உறுதி செய் யும்’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.  அப்படியென்றால், இந்த தொகுப்பு சட்டத்தை கொண்டு வரு வதற்கு முன்பாக, இந்த தொழில் களின் பிரத்யேக பணி நிலை மைகளை ஆய்வு செய்திருக்க வேண்டாமா? அல்லது எந்த தரவு கள் அடிப்படையில் இந்தச் சட்டம்  இறுதி செய்யப்பட்டது? தரவுகளே  இல்லை என்றால், நிலைமைகள் பற்றிய தகவல்களும் இல்லை யென்றால் நீங்கள் உருவாக்கி யுள்ள தொகுப்புச் சட்டம் எப்படி  அந்த தொழிலில் உள்ள பிரத்யேக பிரச்சனைகளை கணக்கில் கொண்டிருக்கும்?. இந்த கேள்வி களுக்கெல்லாம் அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?” இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.