tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: தொழில்துறை எரிசக்தி திறனில் இந்தியா வின் முதல் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்து உள்ளது. மாநில ஆற்றல் திறன் குறியீடு 2024-இல் குழு-1  பிரிவில் 55.3 சதவீத மதிப்பெண்களுடன் தமிழ்நாடு முத லிடம் பிடித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டை நம்பர் 1 மாநில மாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருவதன் பயனாக இந்த சாதனை கிடைத்துள்ளது. ஆந்திரம் 27.5 சதவீதம், ஒடிசா 23.1 சதவீதம், சத்தீஸ்கர்  28.8 சதவீதம் வளர்ச்சி பெற்று அடுத்த இடங்களில் உள்ளன. கட்டுமானத் துறையில் ஆற்றல் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மேலும், அதிக எண்ணிக்கையிலான சான்ற ளிக்கப்பட்ட பசுமை கட்டடங்களைக் கொண்ட முதல்  மூன்று மாநிலங்களில் ஒன்றாகவும் உள்ளது. PEACE  திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு  2023-24-இல் 2.6 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு விருதுகளின் எண்ணிக்கையில் மராட்டியம், தமிழ்நாடு, ஒடிசா ஆகியவை முன்னணி யில் உள்ளன.

தூத்துக்குடியில் மின்சார பேருந்து  உற்பத்தி: வின்ஃபாஸ்ட் திட்டம்

சென்னை: மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், மின்சார பேருந்து உற்பத்தியில் களம்  இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடி ஆலையில் மின்சார பேருந்துகளை தயா ரிக்க திட்டமிட்டுள்ளது. ரூ.16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் அமைக்கப் பட்ட வின்ஃபாஸ்ட் ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். இது வரை மின்சார கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு  வந்த இந்த ஆலையில், இனி மின்சார பேருந்துகளும் தயாரிக்கப்படும். 6 முதல் 12 மீட்டர் நீளமுள்ள மின்சார பேருந்துகளை  அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 281 kWh பேட்டரி திறனுடன் ஒரே சார்ஜில் 260 கி.மீ. பய ணிக்கும் திறன் கொண்ட இந்த பேருந்துகள், தற்போது  வியட்நாம் மற்றும் ஐரோப்பாவில் விற்பனையில் உள்ளன.

தேர்வுகள் ஒத்திவைப்பு  

சென்னை: சென்னை,  காஞ்சிபுரம், செங்கல் பட்டு,  ராணிப்பேட்டை, திரு வள்ளூர் மாவட்டங்களில் டிச.2 அன்று அதி கன மழைக்கான ரெட் எச்ச ரிக்கை விடுத்து வானிலை  ஆய்வு மையம் அறிவித் துள்ளது. எனவே, முன் னெச்சரிக்கை நடவடிக் கையாக, தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழ கம் தெரிவித்துள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ள மாவட்டங்களுக் கான திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறி விக்கப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

மாதம் இரு  சனிக்கிழமை விடுமுறை

சென்னை: மின் வாரி யத்தின் வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் 5,120 மெகாவாட் திறனில் 5  அனல் மின் நிலையங்கள்  உள்ளன. இதுவரை அனைத்து சனிக்கிழமை களும் வேலை நாளாக  இருந்த நிலையில், தொழிற் சங்கங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப் பட்டுள்ளது. வாரிய அலு வலகங்கள், மின் கட்டண மையங்களுக்கு 2018 மார்ச் முதல் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடு முறையாக இருந்தன. இனி அனல் மின் நிலைய ஊழியர்களுக்கும் இதே விடுமுறை வழங்கப்படும். பணி நேரம் காலை 8:30 முதல் மாலை 5:45 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ. 8,119 கோடியிலான  கோவில் நிலங்கள் மீட்பு

சென்னை: தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு,  8 ஆயிரத்து 119 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 8 ஆயி ரம் ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப் பட்டுள்ளதாக என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அருகில் கார்த்திகை தீபம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனுமதி சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தர்ஹா அருகே கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளார்.  திருப்பரங்குன்றம் மலையிலுள்ள பிள்ளையார் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தான் வழக்கம் என்று திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தரப்பில் வாதங்களை எடுத்து வைத்த போதும், இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவரின் கோரிக்கை மனுவை ஏற்று, மலை உச்சியில் தர்ஹா அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றலாம் என்று தீர்ப்பளித்துள்ள ஜி.ஆர். சுவாமிநாதன், காவல்துறை இதற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.