டிட்வா புயல் வலுவிழந்தும் தொடரும் கனமழை!
சென்னை, டிச.1 - தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுவிழந்த போதிலும், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை (டிச.2) அன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடு முறை அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல், கரையைக் கடக்காமல் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு விழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்தது. ஆனாலும், இந்த புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்தது. மேலும் இது வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த புயலானது வலுவிழந்த போதும் மேகக் கூட்டங்களை ஈர்த்து வருவதால், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை காலை முதலே பரவ லாக மழை பெய்து வந்தாலும், முற்பகல் முதல் பலத்த மழை மெல்ல கனமழையாக அதிகரித்தது. நகரும் வேகம் அதிகரிப்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் முன்னதாக மணிக்கு 5 கிலோ மீட்ட ராக இருந்த நிலையில், பிறகு மணிக்கு 10 கிலோ மீட்டராக அதிகரித்தது. இந்த அமைப்பு தொடர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து திங்கட்கிழமை நண்பகலில் சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி, சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகலில் கரையை நெருங்கி யது. மாலை 5.30 மணி நிலவரப்படி 30 கிலோ மீட்டர் தொலைவில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் திங்கட்கிழமை காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ந்து வந்த நிலையில், படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரித்து பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சாலையில் தேங்கிய மழை நீர்! சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, துரைப் பாக்கம், கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம் பேடு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் உட னுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல் பூந்தமல்லி சாலை, பிராட்வே, சென்ட்ரல், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம் பாக்கம், பெரம்பூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், தாம்பரம் என்று மாநகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் தேங்கும் மழை நீரை வெளி யேற்றும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற் கொண்டது. பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: பெற்றோர் ஏமாற்றம் மழை தொடங்கியதில் இருந்தே, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும், ஆசிரி யர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், மழை பெய்யாத நாள்களில் இரவே விடுமுறை அறிவிப்பு வெளியாகிவிடும் நிலையில், திங்கட்கிழமை கன மழை பெய்யத் தொடங்கிய போதும், விடுமுறை அறி விப்பு வெளியாகவில்லை. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் ஏமாற்றத்துடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் மாலையில் வீடு திரும்பும் போது சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்பதால், தனியார் கல்வி நிறுவ னங்கள் மட்டும் அரை நாள் விடுமுறை அளித்தன. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில், சென்னை, கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்ச ரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேசமயம் பாம்பன், தூத்துக்குடி ஆகிய 2 துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக மாநிலத்தில் நவ.27 முதல் டிச.1 வரை - நாகப்பட்டினம் 22.2 செ.மீ, மயிலா டுதுறை 13.2 செ.மீ, திருவாரூர் 10.2 செ.மீ, இராம நாதபுரம் 8.7 செ.மீ, தஞ்சாவூர் 8.6 செ.மீ ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு இந்நிலையில், மேலும் புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச.3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இலங்கையில் சிக்கித் தவித்த தமிழர்கள் மீட்பு டிட்வா புயல் பாதிப்பில் சிக்கி தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 189 பேர் இலங்கையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் ஞாயிறன்று இரவு சென்னை வந்தடைந்தனர். சுற்றுலா, வியா பாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து இலங் கைக்கு சென்றவர்கள் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடு களில் இருந்து இலங்கை வழியாக சென்னை வரு வதற்கு இலங்கை சென்ற பயணிகள் அங்கு தங்கி இருந்தனர். கடந்த மூன்று நாட்களாக டிட்வா புயல் காரண மாக இலங்கை முழுவதும் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய ளவில் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயி ரிழந்தனர். இதனால் இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டன. பெருமழை, வெள்ளம் காரணமாக அங்கு விடுதி கள், உணவகங்கள், கடைகள் மூடப்பட்டிருந்ததால் பயணிகள் உணவு, தண்ணீர் இன்றி பெரும் அவ திக்கு ஆளாகினர். இதனையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த இந்தியர்கள் அனை வருக்கும் உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர்.
