டிட்வா புயல் பாதிப்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அருகே ஞாயிறன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திங்களன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 நபர்கள் உயிரி ழந்துள்ளனர். பலர் காயம் அடைந்து சிவ கங்கை, மதுரை, திருப்பத்தூர் ஆகிய பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். தமிழக அரசு விபத்தில் இறந்த குடும் பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கி உள்ளது. இந்த நிதி அந்த குடும்பத்தின் இழப்பிற்கு போதிய தொகையாக இல்லை. எனவே தமிழக அரசு உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கை அரசு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிக தமிழர்கள் வாழ்வதாலும் அருகில் உள்ள நாடாக இருப்பதாலும் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு இலங்கை அரசிற்கு உதவி செய்ய வேண்டும். இந்தப் புயலால் தமிழகத்தில் பல இடங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. விவசாய பாதிப்புகளை மீண்டும் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஒருவ ரது ஓட்டுகூட விடுபடக் கூடாது என்பதற்காக, இந்த ஒரு வாரம் நீட்டிப்பை வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.