tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது பதியப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடி

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது பதியப்பட்ட  பொய் வழக்கு தள்ளுபடி

மயிலாடுதுறை, டிச.1-  மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில், கடந்த 2018 ஆம் ஆண்டு புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த அந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.  மயிலாடுதுறை காவல்துறை 300-க்கும் மேற்பட்ட காவலர்களை வைத்து போராடிய மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் .துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் சி.மேகநாதன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கணேசன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன், மூத்த தோழர் ஆர்.கோவிந்தசாமி, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி. துரைக்கண்ணு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப. மாரியப்பன், சி. விஜய்காந்த், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. அறிவழகன், எம். மாரியப்பன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ. ராஜேஷ், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம். குமரேசன், எஸ். கருணாநிதி (கடந்த ஆண்டு இறந்து விட்டார்), கே. மகேந்திரன், கே.வேம்பு, பாக்கியராஜ், சி.ராஜா, எம்.முத்துபாண்டி, ஏ.மாரியப்பன், ஆர். கார்த்திக், ஜெயபால், சுந்தரமூர்த்தி, எல். ஆனந்தராஜ் ஆகிய தோழர்களை தாக்கி, அராஜகமான முறையில் கைது செய்து பொய் வழக்கு பதிந்து, 23 தோழர்களை 32 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், திங்களன்று அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களுக்கான போராட்டத்தில்... சிறையில் அடைத்தால் எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறையில் இருப்போம் என ஜாமீனில் விடுதலையான போது, சிறை சென்ற மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.