ஆறுகளில் மண்டியிருந்த ஆகாயத் தாமரைகள் அகற்றம்: ஆட்சியர் ஆய்வு
திருவாரூர், டிச.1- திருவாரூர் மாவட்டத்தில், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மடப்புரம் கிராமம், மறைக்கக் கோரையாறு, திருத்துறைப்பூண்டி வட்டம், வளவனார் பாண்டி கிராமம், வளவனாறு வடிகால் முத்துப்பேட்டை வட்டம், நாச்சிகுளம் கிராமம், கழனியாறு வடிகால், கோட்டூர் ஒன்றியம், நொச்சியூர் ஊராட்சி, விளத்துவெளி கிராமம், காரைத்திடல் பாசன வடிக்கால், மன்னார்குடி ஒன்றியம், ராமபுரம் வடிகால் ஆகிய வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
